search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய்கள் கண்காட்சி
    X
    நாய்கள் கண்காட்சி

    கொடைக்கானலில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கோடை விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. 21வது நாய்கள் கண்காட்சியில் 13 வகையான நாய்கள் இடம்பெற்றன. 54 நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வகைகளுக்கு ஒரு பிரிவும், இதர வகைகளைச் சேர்ந்த நாய்களுக்கு ஒரு பிரிவும், குட்டிகளுக்கு ஒரு பிரிவும் என்று 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியில் செயின்ட் பெர்னார்டு, பிட்புல், கோல்டன் ரெட்ரீவர், கிரேட் டான், ராட்வீலர், புள்டெரியர், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், பக், சீட் ஜூ, ஸ்பிட்ஸ், டாபர்மேன், டெரியர், உள்ளிட்ட 13 வகைகளைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

    போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் செயிண்ட் பெர்னார்டு இன நாய் உரிமையாளர் ஹரிசுக்கு வழங்கப்பட்டது. ஜெர்மன் ஷெப்பர்ட் பிரிவில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜீன் பால் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதர பிரிவில் கோல்டன் ரெட்ரீவர் நாய் உரிமையாளர் அனுராதாவிற்கும், பிட்புல் நாய் உரிமையாளர் சபிக்கும், கிரேட் டேன் நாய் உரிமையாளர் அருணுக்கும் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார். இந்த கண்காட்சி மற்றும் விழாவிற்கு கொடைக்கானல் கால்நடைத்துறை உதவி இயக்குனர் பிரபு, பழனி கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறந்த நாய்களை கால்நடைத்துறை டாக்டர்கள் சங்கர விநாயகம், அருண், தினேஷ் பாபு, பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்தனர். நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தார்கள்.


    Next Story
    ×