என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கள் கண்காட்சி"

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
    • கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.

    கொடைக்கானல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.

    இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • நாய் கண்காட்சியில் 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.
    • 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

    கொடைக்கானல்:

    மெட்ராஸ் கெனல் கிளப்பின் 137 மற்றும் 138 ஆம் ஆண்டு, சேலம் கெனல் கிளப்பின் 25 மற்றும் 26 வது ஆண்டு, கொடைக்கானல் கெனல் அசோசியேஷனின் 7 மற்றும் 8-ம் ஆண்டு நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாக்ரஸ்ஸல் டெரியர், பேஷன்சி, அமெரிக்கன்ஸ்டாப்பட் டெரியர், கெயின் கார்சோ, புல்டாக், பர்னிஷ் பவுண்டன், கார்டன் ஹெட்டர், பேஷன் ஃபிரீஷ் ஆஸ்திரேலியா செப்பர்டு, உட்பட தமிழக வகைகளான ஜெர்மன் ஷெப்பர்ட் கிரேட்டன், அஸ்கர், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதூர்கவுண்ட் உட்பட 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.

    அதில் எஜமானர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிதல், அதன் மோப்ப சக்தி, அவைகளின் உடல் அமைப்பு, அதன் வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்கு சுழற் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இன்றும் கண்காட்சியில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.

    போட்டியின் முடிவில் சிறந்த நாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மெட்ராஸ் கெனல்கிளப்பின் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். செயலாளர் சித்தார்த் முன்னிலை வைத்தார். கொடைக்கானல் கெனல் கிளப்பை சேர்ந்த ஜெய்ஹிந்த் ஜெய்கேஸ் ஜெயதிலகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    இந்த போட்டிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் மெட்ராஸ் கெனல் கிளப் 142 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது இதில் 86 உப கிளப்புகள் உள்ளன. இதன் மூலமாக 138 வது ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளின் நடுவர்களாக செர்பியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவைச்சேர்ந்த ஆறு பேர் நடுவர்களாக உள்ளனர். ஞாபக சக்தி, துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெற்று முடித்தவுடன் சிறந்த நாய்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன என்றனர்.

    நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனக்கு சொந்தமான டேசன்ட் ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டன், ராஜபாளையம் உள்பட ஏழு உயர்ரக நாய்களுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கோடை விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. 21வது நாய்கள் கண்காட்சியில் 13 வகையான நாய்கள் இடம்பெற்றன. 54 நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வகைகளுக்கு ஒரு பிரிவும், இதர வகைகளைச் சேர்ந்த நாய்களுக்கு ஒரு பிரிவும், குட்டிகளுக்கு ஒரு பிரிவும் என்று 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியில் செயின்ட் பெர்னார்டு, பிட்புல், கோல்டன் ரெட்ரீவர், கிரேட் டான், ராட்வீலர், புள்டெரியர், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், பக், சீட் ஜூ, ஸ்பிட்ஸ், டாபர்மேன், டெரியர், உள்ளிட்ட 13 வகைகளைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

    போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் செயிண்ட் பெர்னார்டு இன நாய் உரிமையாளர் ஹரிசுக்கு வழங்கப்பட்டது. ஜெர்மன் ஷெப்பர்ட் பிரிவில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜீன் பால் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதர பிரிவில் கோல்டன் ரெட்ரீவர் நாய் உரிமையாளர் அனுராதாவிற்கும், பிட்புல் நாய் உரிமையாளர் சபிக்கும், கிரேட் டேன் நாய் உரிமையாளர் அருணுக்கும் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பரிசு பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் பரிசுகள் வழங்கினார். இந்த கண்காட்சி மற்றும் விழாவிற்கு கொடைக்கானல் கால்நடைத்துறை உதவி இயக்குனர் பிரபு, பழனி கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறந்த நாய்களை கால்நடைத்துறை டாக்டர்கள் சங்கர விநாயகம், அருண், தினேஷ் பாபு, பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்தனர். நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தார்கள்.


    ×