search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 22-ந்தேதி ஆலோசனை
    X

    ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 22-ந்தேதி ஆலோசனை

    • சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், வாடிவாசல், புதுக்கோட்டை, விராலிமலை உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வர உள்ளது.

    இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    Next Story
    ×