என் மலர்
நீங்கள் தேடியது "stagnant water"
- இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது.
- உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்
உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் நான்கு முக்கு சந்திப்பு சாலை மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது. மேலும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குள்ளே தண்ணீர் புகுந்து விடும் சூழ்நிலை பல மாதங்களாக இருந்தது வந்தது.
இது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு அதிரடியாக பணி நடந்தது. மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உடன்குடிபேரூராட்சி தலைவர் ஹுமைரா செயல் அலுவலர் பாபுல வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, பிரதிப் கண்ணன், முகமது ஆசிப், மற்றும் பலர் உடன் இருந்தனர் தண்ணீர் தேங்காதபடி நிரந்தர நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடன்குடி உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் எனஅனைவரும் நன்றி தெரிவித்தனர்.
- பொதுமக்கள் அவதி
- கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.
புதுச்சேரி:
கடலூர்-புதுவை சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமாக பரபரப்பாக காணப்படும்.
இந்த ரோட்டிற்கு புதிய சாலைகள் போடப்பட்டு சாலை ஓரத்தில் உள்ள கழிவு நீர் வடிதல் வாய்க்கால்களை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுபோல பிள்ளையார் குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை தடுப்பு சுவர் அமைப்பதற்காக பணி கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.
மேலும் கழிவுநீர் அதிகரித்து வருவதால் வாய்க்கால்கால் நிரம்பி ரோட்டிலே தேங்கி நிற்கிறது.
இதனால் கடலூர்- புதுவை செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் ஊர்ந்து செல்கின்றது. மேலும் அவ் வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பிள்ளையார் குப்பம் மாஞ்சாளை ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது.
- தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இதில் சிறிய ரக மீன்கள் குளத்திற்குள் செத்து மிதக்கின்றன. இந்த தெப்பகுள தண்ணீர் துர்நாற்றத்துடன் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஆறாய் ஓடுகிறது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரை மிதித்து கொண்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.
இதை கோவில் நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் இருப்பது பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்:- கோவில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அதில் சிறிது தண்ணீர் கசிகிறது. கூடிய விரைவில் நீர் இறைக்கும் பணி முடிந்து விடும் மேலும் நீர் கசியாமல இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
- சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.
- மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போடவில்லை.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது. தற்பொழுது தெற்கு வட்டார போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செல்லும் இடத்திற்கு செல்லும் வழியில் நேற்று பெய்த மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை புதுப்பிக்கும் முன் எப்படி மழைநீர் தேங்கி நிற்குமே அப்படி சாலை புதுப்பித்த பின்பும் மழை நீர் தேங்கி நிற்கிறது.
மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போட வில்லை. மழை நீர் செல்ல வழியும் ஏற்படுத்தவில்லை. இதனால் சாலை விரைவில் பழுதடைந்துவிடும். மேலும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றார்கள். எனவே சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
- வாகனங்களில் செல்வோர், பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் , தள்ளுவண்டி வியாபாரிகள் பயணிக்கின்றனர் .
இந்த பாலத்தில் மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் வாகனங்களில் செல்வோர் ,பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.