சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போடவில்லை.
தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் முதியவரை படத்தில் காணலாம்.
தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் முதியவரை படத்தில் காணலாம்.
Published on

வீரபாண்டி :

திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது. தற்பொழுது தெற்கு வட்டார போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செல்லும் இடத்திற்கு செல்லும் வழியில் நேற்று பெய்த மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை புதுப்பிக்கும் முன் எப்படி மழைநீர் தேங்கி நிற்குமே அப்படி சாலை புதுப்பித்த பின்பும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போட வில்லை. மழை நீர் செல்ல வழியும் ஏற்படுத்தவில்லை. இதனால் சாலை விரைவில் பழுதடைந்துவிடும். மேலும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றார்கள். எனவே சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com