என் மலர்

  நீங்கள் தேடியது "Public suffering"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.
  • காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

  கடலூர்:

  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கீரப்பாளையம் குமராட்சி குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  இன்று முதல் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

  இந்த நிலையில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதையும் காணமுடிந்தது மேலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை, சுட்டெரிக்கும் வெயில், தற்போது காலை நேரங்களில் பனிப்பொழிவு போன்றவற்றால் பொதுமக்கள் சீதோசன மாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் ஒருபுறம் வெயிலும் மற்றொரு புறம் குளிர்ந்து காற்றும் வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காணமுடிந்தது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.
  • வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  உடுமலை:

  உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமதாஸ் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால்இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தேங்கி உள்ள மழை நீரால்அவர்களும் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி உள்ளது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லைஎனபொதுமக்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
  • பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

  புதுச்சேரி: 

  வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

  ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
  • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  மதுரை

  மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

  தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தாலும் உசிலம்பட்டி, வாடிப்பட்டி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

  இதனால் அந்த பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

  மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

  சிட்டம்பட்டி -17, கள்ளந்திரி -8, தனியா மங்கலம்- 2,மேலூர் -3, சாத்தையாறு அணை- 26, வாடிப்பட்டி -70, திருமங்கலம் -5, உசிலம்பட்டி -90, மதுரை வடக்கு -17, தல்லாகுளம் -12, விரகனூர் -20, விமான நிலையம் -63, இடைய பட்டி -29, புலிப்பட்டி -11, சோழவந்தான் -43, மேட்டுப்பட்டி -39, குப்பனம்பட்டி- 35, கள்ளிக்குடி -4, பேரையூர்- 20, ஆண்டிப்பட்டி -53.

  மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 56.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 587 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 1667 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

  வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.49 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2308 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

  மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 70 சதவீத கண்மாய், குளங்கள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
  • முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.

  இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பால் விநியோகம் தாமதமாக தொடங்கியதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.
  • இதன் காரணமாக அந்த நிறுவனம் முன்பு ஏராளமான முகவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

  மதுரை

  மதுரை மாவட்டத்திற்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 40 வழித்தடங்களில் 390 டெப்போக்கள் மூலம் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

  மதுரை மாவட்டத்திற்கு அதிகாலை 5 மணிக்கு முன்பே ஆவின் பால் சப்ளை செய்யப்படுவது வழக்கம். இன்று காலை 7 மணி ஆகியும் மதுரை கே.கே.நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால் வரத்து இல்லை. இதன் காரணமாக அந்த நிறுவனம் முன்பு ஏராளமான முகவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

  மேலும் ஆவின் பூத் முன்பு பொதுமக்கள் காத்திருந்து, பாலை வாங்கிச் செல்ல வேண்டியதிருந்தது.மதுரை மாவட்டத்தில் பால்வரத்து கால தாமதம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுரை மாவட்டத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் தேவை. தற்போது 1.50 லட்சம் லிட்டர் என்ற அளவில் மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது. பால் உற்பத்தியாளருக்கு தனியார் நிறுவனங்கள், லிட்டருக்கு 35 ரூபாய் வரை பணம் கொடுக்கிறது. ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.30 வழங்கப்படுகிறது.

  இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், தனியார் நிறுவனங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இருந்த போதிலும் மதுரை மாவட்டத்தில் பால் கொள்முதலை அதிகரித்து விநியோகத்தை சரி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே பி.எஸ்.என்.எல் இணையதள சேவை அடிக்கடி பழுதாகி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வருகிறது.
  • பி.எஸ்.என்.எல் வயர்களை துண்டித்து இடையூறு ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களை எச்சரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே பி.எஸ்.என்.எல் இணையதள சேவை அடிக்கடி பழுதாகி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வருகிறது.

  நகர் பகுதியில் அடிக்கடி பி.எஸ்.என்.எல் சேவை நிறுத்தப்படுவதால் வங்கிகள் கேபிள் நெட்வொர்க் வசதிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதனால் வங்கி சேவைகளில் பணப் பரிமாற்றம் செய்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

  பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அடிக்கடி துண்டிக்கப்படும் சேவையை கண்காணித்து தடையில்லா சேவையை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மேலும் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையை குறுக்கி வாய்க்கால் அமைக்கிறோம் என்ற பெயரில் வாகன நெரிசல்களை ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களால் இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

  ஏற்கனவே வடிகால் வாய்க்கால் அமைத்து சாலையை குறுக்கி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் வயர்களை துண்டித்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களை எச்சரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே எரியும் குப்பையால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
  • நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது.

  கடலூர்:

  கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் குவிந்து எரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு இடத்தை மும்முரமாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். இது மட்டும் இன்றி குப்பைகளை சரியான முறையில் அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றார். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் மலை போல் குவிந்து இருந்தன. இன்று காலை குப்பைகள் திடீரென்று எரிய தொடங்கியன. இதனை தொடர்ந்து தற்போது குப்பைகள் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது போல் கரும்புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகின்றது.

  இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களும், அவதிக்குள்ளாகி நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது. இது மட்டுமின்றி சிலருக்கு குமட்டல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுவதால் தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்று உள்ளனர். மேலும் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த குப்பைகள் தற்போது கொழுந்து விட்டு எரிவதால் என்ன செய்ய வேண்டும் என புரியாமல் பொதுமக்கள் தவித்து வருவதையும் காண முடிகிறது. ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றப்படும் குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுதனதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
  • கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன.

  கடலூர்:

  விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ெரயில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ஏற்றுக்கொண்டு சென்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் விழுப்புரத்திலிருந்து ெரயில் பயணிகளை ஏற்றுக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அருகே ஆலப்பாக்கம் ெரயில் நிலையம் சென்றடைந்தன. பின்னர் பயணிகளை ஏற்றுக்கொண்டு ெரயில் புறப்படும் போது ெரயில் என்ஜின் பழுதடைந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் என்ஜினை பழுது சரி செய்து மீண்டும் 20 நிமிடத்தில் புறப்பட்டது. ஆனால் பயணிகள் ெரயில் சிறிது தூரம் சென்ற பிறகு பரங்கிப்பேட்டை பகுதியில் மீண்டும் ெரயில் என்ஜின் பழுதாகி நின்று விட்டது.

  இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் மீண்டும் என்ஜினில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய முயன்றனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டது. இதன் காரணமாக காலை நேரங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கானர் ரயில் எஞ்சின் பழுதான காரணமாக கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரமாக ெரயில்வே தண்டவாளப் பகுதிகளிலும், பிளாட்பார்மிலும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து 9 மணி அளவில் ெரயில் என்ஜின் சரிய செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகவே காணப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கீழக்கரையில் தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
  • பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

  கீழக்கரை

  கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வடக்குத்தெரு 7-வது வார்டு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  1 மாதத்திற்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி துவங்கப்பட்டது. பின்பு ஜல்லி கற்களை பரப்பி 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது இதுவரையிலும் தார் சாலை அமைக்கப்படவில்லை.

  தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

  அந்த பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறு குழந்தைகள் அச்சத்தில் செல்கின்றனர்.

  இது குறித்து நடவடிக்கை எடுத்து தார்சாலையை விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
  • ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்

  குடியாத்தம்:

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் கடந்த சுமார் 7ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே கீழ் பாலம் கட்டப்பட்டது.

  இந்த ெரயில்வே கீழ் பாலம் வழியாக குடியாத்தம் நகருக்கு இப்பகுதியில் உள்ள மேல் ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொத்தகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

  இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தப் பாலம் ெரயில்வே கீழ்பாலம் ஆக இருப்பதால் சுரங்கப்பாதை போல் காணப்படுகிறது மழைக்காலங்களில் இந்த ெரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு அந்த தண்ணீர் வெளியேற்றி அருகில் உள்ள கிணற்றில் விடப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேல்ஆலத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்தது அதனால் ெரயில்வே பாலத்திற்கு கீழே சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

  அதனால் இந்தப் பாலத்தின் வழியாக செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள் வாகனங்களில் தண்ணீர் புகுந்துவிட்டதால் மிகவும் சிரமப்பட்டு பாலத்தை கடந்து செல்கின்றனர்.

  இதனை தொடர்ந்து நேற்று மதியம் நீரை வெளியேற்றும் மோட்டார் மூலம் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தண்ணீர் வெளியேற்ற வெளியேற்ற மீண்டும் ஊற்றுக்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பாலத்தில் தண்ணீர் தேங்கிய சமயத்தில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin