என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய காற்றழுத்தத்தால் கடலூரில் இரவு முழுவதும் மழை பொதுமக்கள் அவதி
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது .
- நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கி காலை வரை நீடித்தது.
கடலூர்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இந்த புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள்பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக கடும் குளிரால் கடலூர் பொதுமக்கள் அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதியது .
மேலும் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் செல்லக்கூடாது என்ற அதிகாரிகளின் அறிவிப்பால் குழம்பினர். நேற்று முதல் திட்டவட்டமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்ற அதிகா ரிகளின் அறிவிப்பால் சந்தோஷமாக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் தற்போது அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த காற்றழுத்த பகுதி எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் உள்ளது.
கடலூரிலும் நேற்று மாலை முதல் வானில் கருமயங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இரவு முழுவதும் கடலூரில் மழை பெய்தது. நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு ,திருவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- கடலூர் - 46.8 தொழுதூர் - 46.0 சேத்தியாதோப்பு - 43.2 பரங்கிப்பேட்டை - 41.8 கலெக்டர் அலுவலகம் - 39.6 சிதம்பரம் - 28.8 பெல்லாந்துறை - 28.0 அண்ணாமலைநகர் - 26.0 கொத்தவாச்சேரி - 20.0 வடக்குத்து - 17.0 லால்பேட்டை - 17.0 வானமாதேவி - 13.6 காட்டுமன்னார்கோயில் - 13.0 லக்கூர் - 13.0எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 10.0 புவனகிரி - 9.0 ஸ்ரீமுஷ்ணம் - 8.1 கீழ்செருவாய் - 8.0 பண்ருட்டி - 7.6 குறிஞ்சிப்பாடி - 6.0 குப்பநத்தம் - 1.2






