சுரங்கபாலத்தில் தேங்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.வாகனங்களில் செல்வோர், பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
 கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் குளம்போல்   தேங்கி உள்ள கழிவுநீரை படத்தில் காணலாம்.
 கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் குளம்போல் தேங்கி உள்ள கழிவுநீரை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் , தள்ளுவண்டி வியாபாரிகள் பயணிக்கின்றனர் .

இந்த பாலத்தில் மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் வாகனங்களில் செல்வோர் ,பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

X

Maalai Malar
www.maalaimalar.com