பல்லடம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் அவதி

சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனத்தின் காட்சி.
தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனத்தின் காட்சி.
Published on

பல்லடம்:

பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com