search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Underground Bridge"

    • பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது.
    • ெரயிலில் சிக்கி பலியாவது தடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ெரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது.

    யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ெரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் ெரயில் பாதையை கடக்கும் இடத்தில் நிலத்தடியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.இதைத் தொடா்ந்து, நிலத்தடி பாலம் அமைக்க ெரயில்வே நிா்வாகம் ரூ.7.49 கோடியை ஒதுக்கியிருந்தது. அதன்படி, 2-வது (பி) பாதையில் மதுக்கரை - எட்டிமடை ெரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டா் உயரமும், 18.3 மீட்டா் அகலமும் கொண்ட நிலத்தடி பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

    இதன் முக்கிய பணியான இரு அகலமான இரும்புப் பாலங்களை ெரயில் பாதையின் குறுக்கே பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக 6 ெரயில்களின் சேவைகள் பகுதியளவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டிருந்தது.பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பாதையில் வழக்கமான ெரயில் சேவை நடைபெற்றதாக பாலக்காடு ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிகமான விபத்துகள் நடைபெற்ற தண்டாவளத்தில் நிலத்தடி பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இனி யானைகள் ெரயிலில் சிக்கி பலியாவது தடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
    • வாகனங்களில் செல்வோர், பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கோர்ட்டு வீதி சுரங்க பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் , தள்ளுவண்டி வியாபாரிகள் பயணிக்கின்றனர் .

    இந்த பாலத்தில் மழை பெய்யாமலேயே பாலத்தின் அடியில் ரெயில் தண்டவாளத்தில் வழிந்து வரும் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் வாகனங்களில் செல்வோர் ,பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    ×