என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடியில் சுடுகாடு இடம் தேர்வு செய்யப்பட்ட காட்சி.
அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடியில் 3 சுடுகாடுகளுக்கு இடம் ஒதுக்கீடு
- வாரச்சந்தை அருகே காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- உடன்குடி - குலசை ரோட்டில் 3 பகுதி மக்களுக்கும் சுடுகாடு வசதி செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சிதலைவர் ஹிமைரா அஸ்ஸாப் கல்லாசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை அருகே வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இது போன்று உடன்குடி வில்லி குடியிருப்பு அருகே விநாயகர் காலனியில் 150-க்கு மேற்பட்ட வீடுகளில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர், உடன்குடி சுல்தான் புரத்தில் இந்திய எழுச்சி சபையை சேர்ந்த 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த 3 பகுதி மக்களுக்கும் சுடுகாடு வசதி இல்லை.எனவே தங்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர வேண்டும் என தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ பேரூராட்சி தலைவரான (நான்) மற்றும் அந்த பகுதி மக்கள் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம் .
இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சியின் ஏற்பாட்டில் திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன். ஆதியாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட உடன்குடி - குலசை ரோட்டில் 3 பகுதி மக்களுக்கும் சுடு காடு வசதி செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று காலை 11 மணிக்கு 3 இடங்களையும் பொது மக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று மழை பெய்யும் போது மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து சரல் மணல் போட்டு மழை நீர் தேங்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன்குடி பஜார் பகுதி சாலைகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை ஏ.டி., சுரேஷ்குமார் ஏற்பாட்டில் கருங்கல் போட்டு மேடாக்கி மழை நீர் தேங்காமல் இருக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொசுவை ஒழிக்க 18 வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






