search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "health problems"

  • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
  • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

  பல்லடம் :

  பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

  இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

  • ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தாளவாடி:

  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

  இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை உணவு ஏதும் எடுக்காமல் படுத்துகிடந்தது.

  இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைப்பாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.

  அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.

  ஒருவரின் உடலில் 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை ‘காரணம் தெரியா காய்ச்சல்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.

  மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானது. பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. பல நாட்கள் கடந்த பின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.

  அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

  வைரஸ் நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரி சிகிச்சை தேவைப்படுவதால், காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
  சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.
  சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

  சிறுநீரக பாதிப்பு என்றதும் அனைவருமே அதிக கவனம் செலுத்துவர். ஆனால் பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

  கீழ் முதுகு வலி

  * கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல. ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும்.

  * சிறுநீர் வெளிர்த்தோ (அ) மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ (அ) மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

  * கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

  * சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி,. சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறிகளை உடனடியாக கவனிப்பது சிறுநீரக பாதுகாப்பிற்கு உதவும். மேலும்

  * புகை பிடிக்காது இருப்பது
  * தேவையான நீர் குடித்தல்
  * காய்கறி சாறு குடித்தல்

  நல்ல உடற்பயிற்சி இவையும் சிறுநீரகத்தினைப் பாதுகாக்கும்.

  கீழ்கண்ட பழக்கங்கள் பழக பழக நிறைந்த பலன் அளிக்கும்.

  * எலுமிச்சை சாறு+ தேன் கிரீன் டீ
   வெது வெதுப்பான நீர் இவற்றில் ஏதாவது ஒன்றினை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர நிறைந்த பலன் கிடைக்கும்.

  * 10-20 நிமிடம் அன்றாட தியானம்

  * 30 நிமிடம் அன்றாட பயிற்சி, யோகா

  * 15 - 20 நிமிடம் ஏதேனும் நல்ல புத்தகம் படித்தல்

  * புரதம், நார் சத்து நிறைந்த அன்றாட காலை உணவு

  * ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் 10 நிமிடம் நடத்தல்

  * எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருத்தல்

  * 2 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடித்தல்

  * அன்றாடம் காய்கறி சாலட், பழம், இவற்றினை உண்ணுதல், போன்ற பழக்கங்களை தினமும் விடாது கடை பிடிக்க குறையாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.
  மனநல, உடல்நல பாதுகாப்போடு செய்யும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை.

  * உடல்நல, மனநலத்தோடு இருப்பவர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடைகளையும், சுகாதாரமான தோற்றத்தினையும் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே துவைத்த ஆடைகளை அணியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் கூட பழைய நைட்டியும், முடிந்த தலையுமாக இருப்பது அவர்கள் மன நலத்தினை பாதிக்கும் என்பதனை உணர வேண்டும்.

  * காலை உணவினை எப்பொழுதும் தவிர்ப்பதில்லை.

  * மதிய உணவில் அதிக கொழுப்பு இல்லாத சத்தி நிறைந்த, காய்கறி, பழங்கள் நிறைந்த உணவாக தவறாது எடுத்துக் கொள்கின்றனர்.

  * பல வேலைகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு பரபரவென்று செய்யாமல் நிதானமாய் முறைப்படி செய்கின்றனர்.

  * எட்டு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குகின்றனர்.

  * எதிலும் மனதினை ஒருநிலைப்படுத்தி வேலை செய்கின்றனர்.

  * பொதுவில் திருமணமானவர்கள் குடும்ப உறவுகளின் அன்பினால் வாழ்வினை மகிழ்ச்சியாய் எதிர் கொள்கின்றனர். இவற்றினை நாமும் கடைப்பிடித்து உடல் நலமும், மன நலமும், வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.
  காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம்.
  ‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம். இன்று சுற்றுச்சூழல் சீர்கேடு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான தகவலும் கூட’’

  இன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது. இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் வெளிப்படுகிற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், லெட், காட்மியம் போன்ற தாதுக்கள் நமது உடலுக்குள் செல்வதால், நுரையீரல் உட்பட எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்குகின்றன.

  அதாவது, மாசடைந்த காற்றினைச் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதோடு, குறைப்பிரசவம், சர்க்கரை நோய் போன்றவையும் நேரிடலாம். நுரையீரலுக்குள் செல்கிற விஷத்தன்மை உடைய உலோகப் பொருட்கள், தாதுக்கள் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக, நச்சுத்தன்மை கொண்ட சிறுநீரக நோய்(Toxic Nephropathy) ஏற்படுகிறது. சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகிற நெப்ரான்கள் பாதிப்பு அடையும்.

  எனவே, சிறுநீர் கழிக்கும்போது, ரத்தமும் கலந்து வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள புரதச்சத்து குறையத் தொடங்கும். அழற்சி வரும். இதனைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை வரும். நுரையீரலில் சளி சேர்ந்து, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தொடர் இருமல் ஏற்படும் அபாயம் உண்டு.

  அது மட்டுமின்றி நுரையீரலில் டிபி(Tuber Culosis) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாளடைவில், இந்த உறுப்பில், COPD எனக் குறிப்பிடப்படுகிற Chronic Obstructive Pulmonary Disease உண்டாகும். மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால், சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.  இரண்டாவது கட்டமாக, காற்று மாசுபட்டால் இதயம் செயல் இழக்க நேரிடும். மறைமுகமாக இதயம் பாதிப்பு அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயமும் உருவாகும்.

  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாக, என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் காற்று மாசுபடுவதாலும் உண்டாகும். மரங்களில் இருந்து வெளிப்படுகிற கார்பன் டை ஆக்சைடு, காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள்(Particulate Matter) போன்றவற்றை சுவாசிப்பதால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

  ஏனென்றால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மை அடைந்த பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் சிசுக்கள் பிறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிறக்கிற சிசுக்களின் உடல் எடை மிகவும் குறைவாகக் காணப்படும்.

  அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால், ஏற்படுகிற பாதிப்புகளைக் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் என வகைப்படுத்தலாம். முதல் வகையான குறுகிய கால பிரச்சனையில், இருமல், சளி, மூச்சுத்திணறல் உண்டாகும்.

  நீண்ட கால பிரச்சனை என பார்க்கும்போது 75 வயதில் நேரிடுகிற இறப்பு முன்கூட்டியே 55  வயதிலேயே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காற்று மாசினால் ஏற்படுகிற உடல்நலக் குறைபாட்டினைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
  மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை பாதிப்படைய செய்யும்.
  மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். சிறுநீரகம் என்பது கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது என்று பலர் கருதுகின்றனர். அதுதான் தவறு. சிறுநீரகம் நமது உடலில் பல வேலைகளை செய்கிறது. சில ஹார்மோன்களையும் உடலுக்கு தேவையான சக்தியையும் உருவாக்குகிறது. இந்த சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் வரும் வரை அதை பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை. அந்த சிறுநீரகத்தில் பாதிப்பு வரும் போதுதான் அதனை பற்றி கவலை கொள்கிறோம். ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது.

  இந்த ஆறு பழக்கங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது

  1. பட்டினி கிடப்பது

  நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பது ஒரு கட்டத்தில் சிறுநீரகங்களை பாதிக்கும். காலை உணவினை தவிர்க்க கூடாது.

  2. அளவுக்கு அதிகமான வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துவது

  வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் பயன்படுத்தும் போது அது சிறுநீரகத்தை பாதிக்கிறது.

  3. அளவுக்கு அதிகமான மது அருந்துதல்

  மது அருந்துவது சிறுநீரகங்களை பாதிக்கிறது. எந்த உணவும் அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது.

  4. உணவில் அதிகமான உப்பு சேர்த்தால்

  உணவில் சமையல் உப்பு என்பது அளவுடன் இருக்க வேண்டும். அந்த உப்பு அதிகமாக இருக்கும் போது சிறு நீரகத்துக்கு அதிக வேலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.

  5. போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

  சிறுநீரகத்துக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமான ஓன்று. உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் மிக முக்கியமானது. இன்றைய காலத்தில் படிக்கும் இளைஞர்கள் முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு தண்ணீரை அருந்துவது இல்லை இதனால் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் தாகம் ஏற்படும் போது மட்டும் தண்ணீர் அருந்துகின்றனர். உப்புகள். நிறைந்த தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்

  6. சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது

  இவ்வாறு செய்வது மிகவும் தவறு. இவ்வாறு செய்வதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கல்லை ஏற்படுத்தும். காலப்போக்கில் சிறுநீரகத்திலும் சிறுநீரக பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் செயல்பாட்டை பாதிக்கும். இந்த தவறை நிச்சயமாக யாரும் செய்ய கூடாது.

  - இந்த ஆறு பழக்கங்கள் மட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள், அளவுக்கு அதிகமான இறைச்சி போன்ற உணவுகளும், புகைபிடித்தல், சரியான தூக்கமின்மை, நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது போன்ற செயல்களும் சிறு நீரகத்தை பாதிக்கிறது. ஒருவேளை சிறுநீரக மண்டலம் சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் போது அதனை சரிசெய்வது சற்று சிரமமான காரியம். வருமுன் காப்பதே சிறந்தது.
  ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
  மனிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சனைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.

  “ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

  ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

  பரிசோதனைகள்

  பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

  தொடர்ந்து, எந்தெந்தச் சூழலில் மேற்கூறிய அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கின்றன என்று பார்க்கப்படும். உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிகப் புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ, அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.  அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.

  ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க…

  ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.

  தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

  ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
  மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
  நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது. மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

  மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும்.

  இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

  முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். இந்த நோய் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும், செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.
  முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். பயம், கோபம், துக்கம், மகிழ்ச்சி முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும். முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.
  மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும்.

  முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுப்படுத்தும் 5 பொறிகளின் வேலை முடங்குகிறது. சூழலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

  ஐம்பொறிகளின் வெளிப்பாடுகள் நிகழ காரணமாக திகழ்வது வாதம், இவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் வாதம் இந்திரியங்களை பழுதாக்குவதாக கூட சொல்லப்படும். இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.

  முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம். அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்புநின்ற மாறிவிடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம். ஆயுர்வேத சிகிச்சை மூலம் நிலைப்பாடு மாறிய வாததோஷத்தை சரிப்படுத்தி குணமாக்க முடியும். தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

  மேலும் அதிகநேரம் சத்தமாக பேசுவது, கடினமான, உணவுபொருட்களை மெல்லுவது, அதிகப்படியான சிரிப்பு, தும்மல், கொட்டாவி, தலையில் அதிக சுமை சுமத்தல், தலை மற்றும் கழுத்தை, திடீரென திருப்புவது, தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை, தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல் ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும்போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மகளிர் கருவுறும்போதும், குழந்தை பிறப்புக்குபின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

  நோய் வருமுன் காணப்படும் அறிகுறிகள்


  * பார்வை மங்குதல்
  * தோலில் தொடு உணர்ச்சி குறைதல்
  * கழுத்தில் ஒருவித இறுக்கம்
  * தாடைகளில் இறுக்கம்
  * மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

  நோய் அறிகுறிகள்

  * முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்
  * தலை நடுக்கம்
  * பற்கள் நடுக்கம்
  * கண்களை சரியாக மூட முடியாமை.
  * மூக்கு கோணல்
  * பேசுவதில் சிரமம்
  * குரலில் கரகரப்பு
  * காது கேளாமை

  * காதில் வலி
  * வாசனையை நுகர முடியாமை
  * உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்
  * கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி
  * மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்
  * தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.  பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந் நோய் ஏற்படுகிறது.

  * வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.
  * காதுக்குள், கன்னத்தில், காதுக்கு பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.
  * திடீரென உருவாகும்-
  * முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.
  * புருவத்தை உயர்த்த முமயாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.
  * கண்களை மூட முடியாமை
  * சாப்பிடும் போது புரையேறுதல்

  * கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.
  * கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.
  * காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்
  * காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.
  * சில சமயம் காது கேளாமை கூட நேரும்.

  நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும். நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத்துவது சிரமம்.  சிகிச்சை முறை

  * தலைக்கு எண்ணெய் தேய்ப்பது.
  * மூக்கில், காதில் மருந்து விடுதல்.
  * பாலில் மருந்து கலந்து, அதைச் சூடுபடுத்தி, வெளிவரும் ஆவியை முகருவது.
  * ‘பத்து’ போடுவது.
  * தலைக்கு மேலே எண்ணெயை நிற்குமாறு செய்வது.
  * புகையை நுகருவது.

  * எண்ணெய் தேய்ப்பது ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
  * அத்துடன், தோஷங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து நீர்கோர்த்து, உப்பியிருந்தால் ‘வாந்தி’ வருமாறு செய்வர்.
  * தாகம் மற்றும் எரியும் தன்மை இருந்தால், அட்டைப்பூச்சியை உபயோகித்து அல்லது காயப்படுத்தி, ரத்தம் வெளியேறுமாறு செய்வர்.
  * பாதைகள் அடைப்பட்டிருந்தால், முதலில் அடைப்பை நீக்க சிகிச்சை தரப்படும். பின் வாதத்தைக் குறைக்க, சிகிச்சை தரப்படும்.

  மருந்து முறை:

  * தனதநயானதி கஷாயம்.
  * மஹா ராசநாதி கஷாயம்.
  * மாஷாபலாதி கஷாயம்.
  * ராசன தச மூலாதி குவேதா கஷாயம் ஆகியவை உள்ளே சாப்பிடத் தரப்படலாம்.
  * மாஷா தைலம்.
  * மாஷாதி தைலம்.
  * மாஷா பலாதி தைலம்.

  * கார்ப்ப சயாதி தைலம்.
  * தன்வந்த்ரம் தைலம்.
  * மஹாமாஷா தைலம்.
  * ஹீரபலா தைலம்.
  ஆகியவை வெளிப்புற உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

  சிறப்பு சிகிச்சைகள்:

  * ஸ்ரீரதூமம் எனப்படும் பால் கஷாயத்தின் புகையை நுகர்வது நல்ல பலனைத்தரும். முகத்தில் ‘ஸ்ரீரபலா101 தைலத்தைக் பூசிக்கொண்டு சித்தா முட்டி வேரைப் பாலில் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வரும் புகையை முகத்தில் படுமாறு அரை மணி நேரம் செய்ய வேண்டும்.

  பின், மூக்கில் 2 சொட்டு ‘ஸ்ரீரபலா101’ தைலத்தை விட வேண்டும். இருமல், தும்மல் எல்லாம் வந்து முடிந்தபின், (கழிவு வெளியேறும்) முகத்தை வெந்நீரில் கழுவலாம் அல்லது துடைத்து விடலாம். இதனை, தினம் ஒரே ஒரு முறை காலை அல்லது மாலையில் செய்ய வேண்டும், வெயில் நேரம் ஆகாது. இச்சிகிச்சை மிகுந்த பலன் தருவதாகும். * முகத்திலிருக்கும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

  உணவு முறை:

  * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
   * எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்
  * நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.

  தவிர்க்கும் வழிகள்

  * எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது.
  * அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது
  * பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிக குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.
  * தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதை தவிர்ப்பது.
  * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.
  உடனிருப்போரின் பெரும் பங்கு

  இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்துவிடும். சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உலைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.

  உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப்பாடுபடுவது மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளிளே அழைத்து போவது, அதிக நேரம் அவர்களுக் காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.

  புணர் வாழ்வு

  நோயின் பாதிப்புக்கு தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும்.

  * பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.

  * பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும். முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகவே வந்தபின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.

  -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
  (போன் 0422-2367200, 2313188, 2313194)
  தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

  இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  ‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது.
   
  அதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.

  பார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.  இவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

  மேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

  சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய்  போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  தந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.  தந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் இ