என் மலர்

  நீங்கள் தேடியது "ponds"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது.
  • தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

  உடன்குடி:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உடன்குடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

  உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையனேரிகுளம், தாங்கை குளம், தருவைகுளம் மற்றும் ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை மழை காலங்களுக்கு முன்பு முழுமையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

  இவைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும். இங்கே எடுக்கப் படும் மணலை கரையில் வைத்து கரையை உயர்த்த வேண்டும். அங்குள்ள மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது. இப்பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் மணல் பாதுகாக்க பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.
  • தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

  உடுமலை :

  உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் வாயிலாக நேரடியாக 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையில் இருந்து தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

  இந்தாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் குளங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.அவ்வகையில் 6 குளங்களில், மொத்த நீர் இருப்பில் 50 சதவீதத்தை விட குறைந்துள்ளது. ஒரு குளத்தில் மட்டும் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.செங்குளம் 74.84 ஏக்கர், நீர்மட்ட உயரம் 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும்.

  தற்போதைய நிலவரப்படி 3.20 அடி நீர்மட்டம், மட்டுமே உள்ளது. மொத்தமுள்ள கொள்ளளவில் 22 சதவீத நீர் இருப்பே தற்போது உள்ளது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும்.

  குளத்தில் 53.86 சதவீத நீர்இருப்பு உள்ளது.பெரியகுளத்தில் 37.13 சதவீதம், செட்டிக்குளம் 34.55, கரிசல் குளம் 16.78, தினைக்குளம் 36.79, வளையபாளையம் குளத்தில் 48.39 சதவீத நீர் இருப்பே உள்ளது. 6 குளங்களில், 50 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

  தென்மேற்கு பருவமழை காலத்தில் குளங்களுக்கு குறைந்தளவே நீர்வரத்து இருக்கும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்மட்டம் வேகமாக குறைந்து விட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன காலம் துவங்கும் முன் குளங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் குளங்களுக்கான வரத்து கால்வாய்களை தூர்வாரி நீர் திருட்டை தடுக்க வேண்டும். மேலும், குளங்களின் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்புகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

  உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சீசன், ஜூன் மாதத்தில் துவங்குவது வழக்கம். இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையால், மானாவாரி சாகுபடிக்கான விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர்.ஆனால் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காமல் வறண்ட வானிலை நிலவியது. இதனால் மானாவாரி சாகுபடியில் பயிர்கள் பாதித்தது. பருவமழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. மழையின் தாக்கத்தால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடையவில்லை.அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், விரைவில் மழை தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் 104 குளங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • ஆய்வின்போது கூடுதல் கலெக்டர், செயற்பொறியாளர் உடனிருந்தனர்.

  மதுரை

  மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ் புதிய ஊரணி (குளம்) அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், செயற்பொறியாளர் மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

  பின்னர் கலெக்டர் அனீஷ்சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கிராமப்புறங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அம்ரித் சரோவர் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்குள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்திற்கு 8 குளங்கள் வீதம் மொத்தம் 104 குளங்கள் புதிதாக உருவாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

  கிராம ஊராட்சிகளில் மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்படும் போது அந்த பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மூலம் கொடி அசைத்து பெயர் பலகைகள் வைத்து பணிகள் தொடங்க வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுத் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்துங்கநல்லூர்:

  நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 8 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கட்டிற்கு வரும் 4 ஆயிரம் கன அடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் 156 அடி கொண்ட சேர்வலாறு அணைக்கட்டில் இருந்தும் 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளும் நிரம்பி அவற்றில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

  இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் அனைத்தும் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் 15 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக செல்கிறது.இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் 6 அணைக்கட்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைக் கட்டும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு மூலமாக மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலமாக வடகால், தென்கால் ஆகிய கால்வாய் வழியாக 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு சுமார் 50-க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் தற்போது வரை 20 சதவீத குளங்கள் கூட முழுமையாக நிரம்பவில்லை.

  இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் இருப்பதற்காகத்தான் சடையனேரி கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உடன்குடி பகுதி மற்றும் அதன் வழியாக சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறும். இதையடுத்து கலெக்டர் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால் எங்கள் பகுதிக்கு கலெக்டர் கூறியபடி தற்போது வரை தண்ணீர் வரவில்லை. இதற்கான எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

  மேலும் அதிகாரிகள் முறையாக தண்ணீர் பகிர்மானத்தினை கையாளதா காரணத்தினால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழை மற்றும் ஆற்றில் வருகின்ற தண்ணீரினை வைத்து தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன குளங்களை நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆற்றுத்தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். 
  ×