மாயமான்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பால்தாய் தலைமை தாங்கினார். தீர்மானத்தினை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார்.
கிராமசபைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
கிராமசபைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான் குறிச்சி ஊராட்சியில் குருவன் கோட்டையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பால் தாய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பூச்செண்டு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியில் பசுமை வளங்கள் அதிகரிக்க ஏரி மற்றும் குளங்களில் மரம் நடும் தீர்மானம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர் நாராயணன், கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com