search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction Waste"

    • சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • அந்த கால்வாய் கட்டுமானப்பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து சிறு, குறு தெருக்கள் வழியாக மிகவும் சிரமத்துடன் சென்று வந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக கடந்த 19-ந்தேதி கழிவு நீர் கால்வாய் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு பின்னர் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பணியினை செய்த ஒப்பந்ததாரர் அந்தப் கால்வாய் கட்டுமானப் பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடையை திறக்க வந்த வியாபாரி கடந்த 4 நாட்களாக கடையை திறக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் கூறுகையில், இந்த கழிவுநீர் கால்வாய் பணிக்காக வியாபாரிகள் ஒரு மாத காலத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதினால் அவதி அடைந்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிந்தும் அங்குள்ள கடையின் வாசலில் கால்வாய் கட்டுமான கழிவுகளை கொட்டப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அவதி அடைந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • பாளையங்கால்வாய் மூலம் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் பாளையங்கால்வாய் 42.46 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த கால்வாய் மூலம் நேரடியாகவும், அதனுடன் இணைந்துள்ள 57 குளங்கள் வாயிலாகவும் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பொதுமக்கள் புகார்

    வருடாந்திர பராமரிப்பு பணி என நிதி ஒதுக்கி இந்த கால்வாயை நெல்லை மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பராமரித்து வருகிறது. எனினும் பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதில், குறிப்பாக மேலப்பாளை யம் பகுதியில் உள்ள பாளை யங்கால்வாயை அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. அந்த கால்வா யில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல தேவையான நீரோட்டமின்றி பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கழிவுநீர்

    மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுவதால் கழிவுநீர் கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. குப்பைகள், கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்வாய் அழியும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தின் தொன்மையான பளையங்கால்வாய் பாழாகி வருவதாகவும், இதனை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
    • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • கட்டிட கழிவுகள் முழுவதும் பாளையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது.
    • மண் அள்ளி விற்பனை செய்த மாரியை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அங்கிருந்த கடைகள் அருகிலேயே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    கட்டுமான பணி

    தொடர்ந்து பழைய கடைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த கட்டிட கழிவுகள் முழு வதும் பாளை அம்பேத்கர் காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது. அதன்பின்னர் தற்போது மார்க்கெட் கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் குவியல் அளவு குறைந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து விடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தர விட்டார்.

    போலீசில் புகார்

    அதில், மர்ம நபர்கள் சிலர் லாரியில் மண் குவியல்களை அள்ளிச்சென்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாளை கே.டி.சி.நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரி என்ற மணல்மாரி மற்றும் அவரது கூட்டாளிகளான அனவரதநல்லூரை சேர்ந்த ராமர், வல்லநாடு அருகே மணக்கரையை சேர்ந்த செந்தில் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் மண் லோடுகளை அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரியை போலீசார் கைது செய்தனர். ஜே.சி.பி., லாரி யை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர், செந்தில் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×