search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaganga Park"

    • மத்திய அரசின் விருதுக்கு கலாச்சார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட விருதுக்கு கலாசார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவரால் செப்டம்பா் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளது.

    எனவே, இக்குளத்தை பொதுமக்கள், அசுத்தம் செய்யாமல், சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், 14 குளங்கள் ரூ. 26.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    இருக்கைகள் உள்ளிட்ட சில நிலுவை பணிகளும் விரை வில் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்களில் திறக்கப்படும்.

    தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே யூனியன் கிளப் பின்புறமுள்ள இடத்தில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்து மிடம் அமைக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே தற்காலிகமாகச் செயல்படும் மீன் சந்தை அருகிலுள்ள இடத்துக்கு மாற்றப்பட வுள்ளது.

    இதற்குத் தேவையான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தற்போது மீன் சந்தை உள்ள இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

    மாநகரில் தாா் சாலை அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதில், புதை சாக்கடை திட்டத்துக்குப் பிறகு போடப்படாமல் இருந்த குறுக்கு சாலைகள், குறுக்கு சந்துகளிலும் தாா் சாலை அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பணிகளும் 2024, மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    அனைத்து சாலைகளிலும் புதிதாக எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்ப டவுள்ளன.

    ராஜ வீதிகளில் புதை மின் தடங்கள் அமைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தி தாா் சாலை போடப்படும்.

    மேலும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படும்.

    மாநகரில் 29 இடங்களில் மழை நீா் வடிகால் வசதி செய்யப்படுகிறது.

    மாநகரில் பயன்பாட்டில் இல்லாமல் மிக மோசமான நிலையிலுள்ள 44 பூங்காக்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, புதிதாக விளையாட்டு உபகர ணங்கள் அமைக்கப்படவுள்ளன.

    மேலும், இப்பூங்காக்கள் தனியாா் பராமரிப்பில் விடப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்

    ×