உடல்நலம் பாதித்த பெண் யானை

ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல்நலம் பாதித்த பெண் யானை
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை உணவு ஏதும் எடுக்காமல் படுத்துகிடந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com