search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணி பெண்களுக்கு  தலா ரூ.1000 உதவித்தொகை
    X

    விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 மற்றும் வளைகாப்பு பொருட்களை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை

    • கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது.

    கா்ப்பிணிப் பெண்க ளுக்கு வளைகாப்பு பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணும் நிலைப்பாட்டை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது. அதன்மூலம் ஏழை, பணக்காரா் என பாகுபாடின்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டா ரங்களில் உள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 611 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு தொகுதிக்கு 50 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 43 தொகுதிகளில் 2 ஆயிரத்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.

    அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    கா்ப்பிணி தாய்மார்கள், கா்ப்பகால மாதம் முதல் தொடங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சாியான மாதாந்திர பாிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

    அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கா்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×