என் மலர்
நீங்கள் தேடியது "Husband Dead"
- அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
- மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
புரசைவாக்கம், சைக்கிள்காரன் தெருவைச் சேர்ந்தவர் அசோக் பாபு (வயது53). இவர் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் வேலையும், கட்டுமான வேலைகளும் செய்து வந்தார். இவரது மனைவி பத்மினி(48).
இவர்களது மகள் ஆர்த்தி திருமணமாகி மும்பையில் வசித்து வருகிறார். மகன் அரவிந்த் பெங்களூரில் கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பத்மினிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கணவன்-மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை ஆர்த்தி, புரசைவாக்கத்தில் உள்ள தந்தை அசோக்பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்போனுக்கு அழைத்தபோது அதனை யாரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. பூட்டிய வீட்டுக்குள் பத்மினி இருந்தார். ஆனால் அவர் கதவை திறக்க மறுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது நிர்வாண நிலையில் அசோக்பாபு இறந்து கிடந்தார். அதன் அருகில் அவரது மனைவி பத்மினி அமர்ந்து இருந்தார். வெளியே வர மறுத்த பத்மினியை போலீசார் வலுக்கட்டாயமக இழுத்து வெளியேற்றினர்.
அசோக்பாபுவின் உடல் அழுகிய நிலையில் உப்பி காணப்பட்டது. மார்புக்கு மேலும், இரண்டு கை மற்றும் கழுத்தின் அருகில் தோல் உறிந்த நிலையில் இருந்தது.
கணவரின் இறந்த உடலுடன் மனைவி பத்மினி 3 நாட்கள் இருந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கணவர் உடல் அருகேயே இருந்து இருப்பது தெரியவந்தது.
அசோக்பாபு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.






