கணவன் இறந்த விரக்தியில் வயிற்றை கத்தியால் கிழித்துக்கொண்ட நிறைமாத கர்ப்பிணி

அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் இறந்த விரக்தியில் வயிற்றை கத்தியால் கிழித்துக்கொண்ட நிறைமாத கர்ப்பிணி
Published on

உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.

வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.

மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com