என் மலர்

  நீங்கள் தேடியது "black flag"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
  • தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  பல்லடம் :

  பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கருப்புக் கொடிகளை அவிழ்த்துவிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர் .இந்நிலையில், நேற்று மீண்டும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எரிவாயு தகன மேடைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்

  விழுப்புரம்: 

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கிராமத்திற்குத் தேவையான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

  அப்போது கிராம பொதுமக்கள் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் பேசியதால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படாமல் உள்ளது எனக்கூறி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். திருவெண்ணைநல்லூர் போலீசார் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யாமற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதே இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
  • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது.

  பல்லடம் :

  பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  மேலும் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,பல்லடத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பச்சாபாளையம் பகுதியில்,நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியுடன்,கருப்பு கொடியும் பறக்கும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பச்சாபாளையம் பொது மக்கள் கூறியதாவது:-

  சுற்றுப்புறம் குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தப் பகுதியில் மின்மயானம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் உடன், சுற்றுப்புறச் சூழலும் கெடும்.எனவே, பச்சாபாளையத்தில் மின்மயானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10நாட்களாக வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளோம்.இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசிய கொடியையும் மற்றும் கருப்பு கொடியையும் பறக்கவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டக்குடி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
  • அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாந்ப்ப அய்யனார் கோவிலில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென திட்டக்குடி வட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும் எனக்கோரிக்கை வைத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் , கையில் கருப்பு கொடி ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைக்கோட்டாலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், நெற்பயிர் சாகுபடி செய்தும் வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அரசிடம் ஒப்படைத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். 

  இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் அம்பிகா மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களின் கோரிக்கையை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் கிராம மக்கள் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவர்கள், இரவு நேரமாகிவிட்டதால், நாங்கள் போராட்டத்தை கைவிட்டு செல்கிறோம். மீண்டும் நாளை(அதாவது இன்று) போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூச்சிஅத்திப்பேட்டில் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

  பெரிய பாளையம்:

  வெங்கல் அருகே உள்ளது பூச்சி அத்திப்பேடு கிராமம். இந்த ஊராட்சியில் சுமார் மூவாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் ஆயிரத்து 152 வீடுகள் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

  இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் சென்னைக்குச் செல்லும் குடிநீர் மாசுபடும் என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

  மேலும் கட்டிடம் கட்டும் இடத்தை தங்கள் பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கடந்த மாதம் 11-ம் தேதி கிராம மக்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய ஊத்துக்கோட்டை தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இருப்பினும்,கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்ன வெங்கடாஜலபதி தலைமையில் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள்,வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #rahulgandhi #arjunsampath

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

  இந்த நிலையில் குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

  இதே போல் அஞ்சு கிராமத்தில் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #rahulgandhi #arjunsampath

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழி, நாகர்கோவிலில் நாளை வைகோ-காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறார்கள். #modi #vaiko #congress

  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி அரசு விழாக்களில் பங்கேற்க தமிழகம் வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

  இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வருகிறார். அரசு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

  இது பற்றி குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

  கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வர இருக்கிறார். அரசு விழாவிலும் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்.

  ஆரல்வாய்மொழி சந்திப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான ம.தி.மு.க. வினர் கலந்து கொள்வார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையே கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

  நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குமரிகிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  போலீசார் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரசார் கூறியுள்ளனர். #modi #vaiko #congress

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
  ஆலந்தூர்:

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சுற்றுச்சூழல் போராளி மாயமானது குறித்து ரெயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அது சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகார் வரவில்லை என்றும் முகிலன் குடும்பத்தினர் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

  முகிலனின் மகன் கார்முகில், வக்கீல் ஹென்றி ஆகியோர் முகிலன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் புகார் வரவில்லை என்று கூறுவது ஏன் என்பது புரியவில்லை.

  முகிலன் காணாமல் போகும் முன்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல் துறை குறித்து குற்றம்சாட்டி இருக்கிறார். பல ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதன் பிறகு அவர் காணாமல் போய் இருப்பதால் பயம் ஏற்பட்டுள்ளது.

  முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்காக நல்லக்கண்ணு தலைமையில் மனித சங்கிலி நடந்தது. ம.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துவிட்டு அதில் நான் கலந்துகொண்டேன். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்கச் சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடிய நான் உள்பட 6 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் செயல். முகிலன் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

  பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு 120 கோடி மக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ம.தி.மு.க. சார்பில் ராணுவத்தினருக்கு எங்கள் வணக்கம்.

  தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.  பிரதமர் மோடி வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வருகிறார். அவர் கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் ஜனநாயகத்தை மதித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.

  ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட துரோகங்களை செய்து இருக்கிறார். அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக மோடி வர இருக்கிறார். எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம்.

  இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #PMModi #GoBackModi
  கவுகாத்தி:

  அசாம் மாநிலத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதேபோல், எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதிகளில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இந்த நிலையில், 2-வது நாளாக இன்று வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் கூறியுள்ளன. பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவின் மூலம் இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  இதற்கு முன்பு 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று இருந்தது இப்போது 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதேசமயம், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. #PMModi #GoBackModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூருக்கும், கன்னியாகுமரிக்கும் வருகை தரும் பிரதமர் மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #PMModi
  சென்னை:

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு மத்தியில் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.

  மதசகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதிஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவிமயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப்பிடியில் போய்க் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

  மத்திய பா.ஜ.க. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.  அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print