search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னரை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டியளித்தார்.

    கவர்னரை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
    • திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.

    மரபை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தஞ்சைக்கு வருகிற 24-ந் தேதி வரும் கவர்னரை கண்டித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

    திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே உடனடியாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும். ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், கண்ணன், செந்தில், தமிழ்செல்வி, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×