search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதி செய்து தர கோரி வீட்டில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
    X

    57-வது வார்டு களரம்பட்டி புலிகார தெருவில் சாக்கடை, சாலை வசதி கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

    அடிப்படை வசதி செய்து தர கோரி வீட்டில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

    • சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 20 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியு மாக காணப்படுகிறது.

    சாக்கடை வசதிகள் இல்லை. மழைகாலங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மக்கள் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. இது சம்மந்தமாக பல்வேறு மறியல் போராட் டங்கள் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் இரண்டு மாதத்தில் சாலை, சாக்கடை வசதி செய்து தருவதாக கூறி சென்றனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து புலிகார தெருவில் பொது மக்கள் கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீசாரும், அதிகாரி களும் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×