என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் போராட்டம்"
- மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
- அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மீன்பிடி ஒழுங்கு முறை தடை சட்டம் 1983-ன் தடையைமீறி, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.
இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறியும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன்வள துறையை கண்டித்தும் தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் உள்ள கடலில் இறங்கி ஏராளமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பெண்கள் தரங்கம்பாடி கடற்கரையில் கைகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
- இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சுமார் 600 உறுப்பினர்களை கொண்ட, பெஸ்தவர் மீனவர் சங்கத்தின் மூலம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் உரிமம், கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில், தந்தை பெரியார் உயிரின சரணாலயத்துக்குள் வரட்டுப்பள்ளம் அணை இருப்பதாக கூறி, மாவட்ட வனத்துறையினர், மீன்பிடிக்க திடீரென அனுமதி மறுத்தனர்.
இதனால் வரட்டுப்பள்ளம் அணையில் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலையால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை எனக்கூறி, முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
மனு சம்பந்தமாக எந்தவிதமான, நடவடிக்கையும் இல்லாததால், கடந்த 25-ந்தேதி, குடும்பத்துடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில், மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இரண்டு நாட்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டத்தை மீனவர்கள் தற்காலிமாக கைவிட்டனர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று காலை, அந்தியூரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், 50-க்கும் மேற்பட்டோர் கொடியை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
வங்களாவிரிகுடாவில் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி கடந்த மாதம் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து சென்றது. அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படாததால் இன்று 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தற்போது வரை ரூ.10 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று (19-ந்தேதி)ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 4 மணிக்கு தங்கச்சிமடம் ரெயில் நிலையம் திரளும் ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து தாம்பரம் விரைவு ரெயிலை மறித்து போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் சுமார் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் மற்றும் அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, உடனடியாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடற்கரையில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
- வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
- அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர் தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் லட்ச க்கணக்கில் விடப்படுகிறது.
மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவு பெற்ற மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அைவ மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதன்மூலம் மட்டுமே அவர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியா ருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீன் பிடி குத்தகையை தனியாருக்கு விடும் பட்சத்தில் வைகை அணை நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் கலையரசி யிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
- நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
தமிழகத்திலேயே பாரம்பரிய நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான்.
இங்கு மீன்பிடி தங்குதளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாததினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் தான் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்தது வந்தது.
நேற்று முன்தினம் இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர்.
இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரை ஒட்டி 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும்.
- மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும், சின்ன முட்டம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்களில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி விட வேண்டும், நாட்டு படகு மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் அருகே இடிந்தகரை, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டம் தொடர்பாக நேற்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்.
- பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்து வந்தது.
கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வள்ளியூரில் இன்று பேச்சவார்த்தை நடைபெறுகிறது.
- துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் துறைமுக பகுதியில் கடந்த சில வாரங்களாக விதிகளுக்கு முரணாக அதிக நீளமும், அகலமும் கொண்ட 24 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டன. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த மற்ற மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தந்பட்ட 24 பைபர் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து இந்தப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை. உடனே படகுகளை எடுத்துச்செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் படகுகளை எடுத்துச்செல்லாமல் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 24 படகுகளுக்கும் அதிகாரிகள் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இதனை கண்டித்தும், அபராதத்தை ரத்து செய்து மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரியும் 24 படகு உரிமையாளர்களும், அதில் மீன்பிடிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ராமேசுவரம் துறைமுக அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
- மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமை அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில் திடீரென தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும் அணையில் மீண்டும் பழைய முறைப்படி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் வைகை அணை நீர்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், டி.எஸ்.பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மீன்வள உதவி இயக்குனர் பஞ்சராஜா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு சரிபங்கு அடிப்படையில் மீன்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தனியார் மீன்பிடி உரிமம் பெற்றவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து வருகிற 25-ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரவு நேரத்தில் மீனவர்கள் யாரும் வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க கூடாது என்பதற்காக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 16 பேர் மீது வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
சென்னை:
மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தி வந்தனர். இருப்பினும் மீனவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
- போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை.
- பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிஅருகே உள்ள சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல்பங்கு அமைக்கு ம்பணிதொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.
போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து இன்று 11- வது நாளாக பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருக்களில் இன்றும் 3-வது நாளாக கருப்புக் கொடி கட்டப்பட்டு உள்ளது.இதனால்அங்கு பெரும்பரபரப்பும் பதட்ட மும்நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு இன்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.
போராட்டத்தில ஈடு பட்டுள்ள மீனவர்க ளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






