search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரகுளம் அருகே  கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்
    X

    கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.

    சேரகுளம் அருகே கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்

    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் கேரள மாநிலத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது
    • கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரியில் உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் இருந்து கேரள மாநிலத்தில் விளிஞ்சம் துறைமுகத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு தெற்கு காரசேரியில் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது. இந்த லாரியை துளுக்கர்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த லாரி சேரகுளம் அருகே உள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்தது.

    இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சேரகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×