என் மலர்
நீங்கள் தேடியது "லாரி விபத்தில் சிக்கியது"
- மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.
- சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்து.
கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.
சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷோரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே ஜமீன் ஊராட்சியில் வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்ற லாரியின் டயர் வெடித்து லாரி தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது.
அப்போது அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓட்டம் பிடித்தனர் போலீசார் விபத்துக்கு உள்ளான லாரியை சோதனை செய்தபோது அதில் 45 மூட்டை ரேஷன் அரிசி என தெரியவந்தது.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் மாவட்ட நுகர் பொருள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர்.
மாவட்ட வட்ட வழங்கல் லாரியில் எங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டது என்ற ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






