என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The truck was involved in an accident"

    • டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஜமீன் ஊராட்சியில் வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்ற லாரியின் டயர் வெடித்து லாரி தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓட்டம் பிடித்தனர் போலீசார் விபத்துக்கு உள்ளான லாரியை சோதனை செய்தபோது அதில் 45 மூட்டை ரேஷன் அரிசி என தெரியவந்தது.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் மாவட்ட நுகர் பொருள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர்.

    மாவட்ட வட்ட வழங்கல் லாரியில் எங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டது என்ற ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×