என் மலர்
நீங்கள் தேடியது "Tirunelveli Accident"
- ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
- சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.
இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பாளை அருகே உள்ள கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தில் தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ஆறுமுகம், நான்கு வழிச்சாலை வழியாக கீழநத்தம் செல்வதற்கு மொபட்டில் சென்றார். நான்கு வழிச்சாலை விலக்கில் திரும்பும்போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கங்கைகொண்டான் நான்கு வழி சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் தனது மனைவின் தங்கையான மேகலா (18) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரியில் இருந்து சாம்பவர் வடகரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வந்த போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து அம்பை வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்ளிட்ட போலீசார் படுகாயமடைந்த மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேன் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.