என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லை அருகே விபத்து- 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி மரணம்
  X
  108 ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

  நெல்லை அருகே விபத்து- 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
  • சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.

  இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.

  இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

  சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

  Next Story
  ×