என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் பலி"

    • மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
    • மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தியாகதுருகம்:

    கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சரவணன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரது மகன் கவுதம் (24). இவர்கள் இருவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.

    நண்பர்களான இவர்கள் நேற்று நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருநகருக்கு சென்றனர். அவர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 2 பேர் மீதும் ஏறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் (வயது21), பார்த்தசாரதி(18). இவர்கள் இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இன்று காலை கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.

    மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.

    இதில் நிலை தடுமாறிய அவர்கள், மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்கு முன் இருவரின் மீதும் அரசு பஸ் ஏறி இறங்கியது. இதனால் முனீஸ்வரன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பஸ் மோதி பலியான 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலைக்கு சென்ற 2 வாலிபர்கள் அரசு பஸ்சில் சிக்கி உடல்நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இரணியல்:

    திருவட்டார் அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 23). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆல்வின் பெற்றோர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இந்த வாரம் நடக்க இருந்தது.

    இதையடுத்து ஆல்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மேலும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பெங்களூரில் வேலை பார்க்கும் நண்பர்களை அழைத்து இருந்தார். அவரது நண்பர்கள் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலமாக நாகர்கோவில் வந்தனர். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆல்வின், சிதறலில் இருந்து நாகர்கோவிலுக்கு வர புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் ஆல்வின், அவரது இன்னொரு நண்பர் ராகுல் (23) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற 2 நண்பர்கள் விபின் சேவியர் (26), ஜெனிஸ் (26) இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வில்லிக்குறி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசியது. இதில் ஆல்வின், ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தது.

    அப்போது நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி டெம்போ ஆல்வின், ராகுல் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபின், சேவியர் ஜெனிஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 2 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ஆல்வின், ராகுல் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருவரும் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பலியான ஆல்வின், ராகுல் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது.
    • விபத்தில் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிக்கள் விடிய, விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், திருவிழாவை காண முத்துப்பேட்டை உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (வயது 17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர் தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன் (24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இரவு முழுவதும் கண் விழித்து திருவிழாவில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் வந்த தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது.

    இதில் அருண் என்பவர் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பரத்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதை தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்தனர்.

    அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பரத்குமாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்னர், அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருவிழாவை காண வந்த வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
    • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

    உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
    • விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.

    புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
    • 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.

    அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.

    ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
    • 2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை ரெயில் தண்டவாள பகுதியில் இன்று அதிகாலை 2 வாலிபர்களின் உடல் சிதறி கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த அவர்களின் விவரம் குறித்த எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவர்களது சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்தது. அதனை தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரெயில் படியில் நின்று பயணம் செய்யும்போது 2 பேரும் தவறி விழுந்து இறந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    • முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
    • விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.

    இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
    • விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    செஞ்சி:

    புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×