என் மலர்

  நீங்கள் தேடியது "Madurai Accident"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). இவர் நேற்று இரவு மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார்.

  அழகப்பன் நகரில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த வடை கடைக்குள் புகுந்தது.

  அங்கு வடை சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய் நாலாபுறமும் சிதறியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஷ்ணு சுதன், வடை கடை ஊழியர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த விபத்து தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.
  • டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டியை அடுத்துள்ள வாடி கருப்புக்கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 32). இவர் உசிலம்பட்டியில் உள்ள நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் அரசு பஸ் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

  அதன்படி நேற்று மாலை வேலைமுடிந்து தங்கபாண்டி ஊருக்கு புறப்பட்டார். இதற்காக உசிலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த வாசிநாதன் என்பவர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ அங்கு வந்தது. அளவுக்கு மீறி அதில் பயணிகள் பயணித்தனர். இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் தங்கபாண்டி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

  உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்தில் பள்ளி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
  • காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  திருமங்கலம்:

  விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி பஸ் இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தது.

  மையிட்டான்பட்டி விலக்கு பகுதியில் பஸ் சென்றபோது சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பள்ளி பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

  இதில் கார், பஸ்சுக்குள் சிக்கி முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதேபோல் பள்ளி பஸ்சின் முன்பகுதியும் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனசேகரன் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

  விபத்தில் பள்ளி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி காரில் சிக்கியிருந்த தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்தால் நான்கு வழிச்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது.
  • பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

  மதுரை:

  மதுரை விளாங்குடி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் பிரபாகரன் இன்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாததால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.

  அந்த பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது. அப்போது பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை கல்லில் மோதி படுகாயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

  இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவம் பற்றி அறிந்த மாணவரின் பெற்றோர் காலையில் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்ற மாணவர் பஸ்சில் இடம் கிடைக்காமல் தொங்கி கொண்டு சென்றதில் பலியாகி விட்டானே என்று கதறி அழுதனர்.

  மேலும் மாணவர்கள் பாதுகாப்பில் போக்குவரத்துறை மற்றும் போலீசார் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் என்று பலியான மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

  மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் விளாங்குடி 9-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் பஸ்சில் தொங்கி சென்றபோது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
  • படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  அவனியாபுரம்:

  மதுரை ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகரை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா மகன் அப்துல் கலாம் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜா முகமது மகன் ரகீம் (23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பெருங்குடி நோக்கி சென்றனர்.

  அவர்கள் பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பலியான 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசாரின் விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வாகனத்தை திண்டுக்கல் மாவட்டம் தேத்தம்பட்டியைச் சேர்ந்த முருக பாண்டியன் (46) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் வேகமாக வந்ததால் இந்த விபத்து நடந்ததா? இதில் யார் மீது தவறு உள்ளது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விபத்தில் பலியான அப்துல்கலாம் கார் ஷோரூமில் பணியாற்றி வந்ததும், ரகீம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையை சேர்ந்த வக்கீல் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் மனைவி மற்றும் மகளை பறிகொடுத்துள்ளார்.
  மதுரை:

  கொடைக்கானல் மலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்த வக்கீல் கோகுலின் மனைவி நந்தினி பாரதி, 3 மாத கைக்குழந்தை தனயாழினி, மாமியார் அழகுராணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

  வக்கீல் கோகுலுக்கும், தேனி மாவட்டம் சுப்புலாபுரம் சத்யா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகள் நந்தினி பாரதிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

  நந்தினி பாரதி சுப்புலாபுரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது.

  தீபாவளிக்காக கோகுல் மனைவி மற்றும் குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது தான் கார் கவிழ்ந்து 3 பேரும் பலியாகி விட்டனர்.

  இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கர்நாடகவை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  கர்நாடக மாநிலம் ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் நிங்கப்பா. இவரது மகன்கள் அபிஷேக்குமார் (வயது 19), ஆதர்ஷ்(18). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனித்தனி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.

  நேற்று மதுரை வந்த அவர்கள் நெல்லை செல்வதற்காக மதுரை- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றனர். பசுமலை அருகே உள்ள விபூதி விநாயகர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஆதர்ஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் படுகாயம் அடைந்த ஆதர்ஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்த அபிஷேக் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  பேரையூர்:

  திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்ட் கடை அதிபர். இவரது மகன் சுரேஷ்குமார் (25).

  சகோதரர் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்றார். அவருடன் கல்லூரி மாணவரான பிருத்விராஜ் (19) என்பவரும் சென்றார்.

  கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் சென்றபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இந்த விபத்தில் சுரேஷ் குமார் மற்றும் பிருத்வி ராஜ் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  பிருத்விராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகாசியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
  மதுரை:

  மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் ஜோதி (34). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

  நேற்று நள்ளிரவு ஜோதி, தனது உறவினர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சத்தியவாணி (44), அவரது மகள் சூர்யகலா (20) ஆகியோருடன் ஒரே மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

  டி.பி.கே. ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஜோதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. அதே வேகத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஆம்னி பஸ் மோதியது. இதில் மொபட், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

  விபத்தில் ஜோதி, சத்திய வாணி, சூர்யகலா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆனந்தன் 28, விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

  இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யகலா, விக்னேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இன்று காலை சிகிச்சை பலனின்றி சூர்யகலா பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விக்னேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

  விபத்தில் பலியான சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஆனந்தன் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

  விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#MaduraiAccident
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 ஆயுதப்படை காவலர்கள் பலியானார்கள். விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் பரிதாபமாக இறந்தார்.
  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 27).

  அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (28). இவரும் ராஜபாண்டியும் சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.

  நேற்று 2 பேரும் மோட்டார்சைக்கிளில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.

  செக்கானூரணி அருகே புளியங்குளம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் எதிர் திசையில் வந்த காரின் மீதும் மோதியது.

  இந்த விபத்தில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தினேஷ், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

  விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் (63) அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் இருந்த அவர் நள்ளிரவில் இறந்தார். மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டி.வி. தொடர் நடிகர் உடல் நசுங்கி பலியானார். 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #MelurAccident
  மேலூர்:

  சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டினார். பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

  இன்று காலை மதுரை மாவட்டம் மேலுர் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. வஞ்சிநகர் என்ற பகுதியில் வந்த போது ஆம்னிபஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

  இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

  விபத்து குறித்து தகவல் அறிந்த மேலுர் சுங்கச்சாவடி மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 20 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  செல்லும் வழியிலேயே சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாமிகண்ணு மகன் மதன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ஐ.டி. ஊழியர் ஆவார். மேலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

  படுகாயமடைந்த மற்ற 19 பேர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சங்கீதா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo