திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி
Published on

திருமங்கலம்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.

இன்று காலை திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் நடந்த 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com