search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy dead"

    • விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 16) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி தென்காசி ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் இஷ்வந்த் (வயது 4).

    கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் சிறுவன் இஷ்வந்த் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு அலமாரியில் ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த பேன் மருந்தை, குளிர்பானம் என நினைத்து விளையாட்டு தனமாக இஷாந்த் அதனை எடுத்து குடித்துவிட்டான். இதனால் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே அவனை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). நேற்று இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதியது.

    இதில் லோகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் உயிரிழந்தார்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (வயது4)

    சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ரக்சனை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
    • விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகா மஸ்ஜித்(45). மினி லாரி டிரைவர். இவர், தனது மகன் அப்சல் ரகுமானுடன்(11) சென்னையில் இருந்து மினி லாரியில் சேலம் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற லாரி மீது மினி லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவரது தந்தை லாரி டிரைவர் சாகாமஸ்ஜித்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தந்தை கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.
    • வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திரிவேணி(30). தம்பதியின் மகன்கள் யஷ்வந்த் (5), ஜஸ்வந்த்(3).

    சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், ஐதராபாத் அருகே உள்ள குசைகுடா சோனியா நகரில் குடிபெயர்ந்தார்.

    நேற்று சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தேங்காய் துண்டு ஜஸ்வந்த் தொண்டையில் சிக்கியது.

    திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தாய், தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கமலாபூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாரிப்பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

    இவரது மகன் தனுஷ் (வயது 11). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி பள்ளியில் கல்வி தினப் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள தனுஷ் சென்றான். பேரணி முடிந்த பிறகு அங்குள்ள பேக்கரியில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றான்.

    தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது. இதனால் அச்சமடைந்த தனுஷ் சாலையில் வேகமாக ஓடினான்.

    அப்போது எதிர் திசையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
    • நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    செய்யாறு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு வீரா (வயது 16), சிவா என 2 மகன்களும், செம்பருத்தி என்ற மகளும் உள்ளனர்.

    வீரா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

    கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கிய வீராவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் போலீசார் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
    • அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரபு பாலம் பகுதியை சேர்ந்தவர் கங்கு நாயுடு. ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் பவன் (வயது 8), சரண் (7).

    இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் மகன்களுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டும் என கங்கு நாயுடு முடிவு செய்தார்.

    இதையடுத்து அனக்கா பள்ளி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். முதல் நாள் பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் பழக கற்றுக் கொடுத்தார்.

    நேற்று மாலை 2-வது நாளாக மகன்களை நீச்சல் குளத்துக்கு கங்கு நாயுடு தனது மகன்களுடன் சென்றார். நீச்சல் குளத்தில் நீச்சல் பழக மகன்களை இறக்கி விட்டார்.

    அப்போது பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்கு நாயுடு நீச்சல் குளத்தில் இறங்கி 2 மகன்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுவன் பவன் இறந்து விட்டார். இதனை கண்டு கங்கு நாயுடு அழுது துடித்தார். 2-வது மகன் சரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    • சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    அகமத்நகர்:

    மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான்.

    இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

    இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

    சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.

    • யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
    • அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.

    சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முகமது ரஷீத்(வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற முகமது ரஷீத் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன முகமது ரஷீத் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×