என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் கிரிக்கெட் பந்து தாக்கி சிறுவன் பலி
    X

    தெலுங்கானாவில் கிரிக்கெட் பந்து தாக்கி சிறுவன் பலி

    • பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ரங்காராவ் பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. இவரது மகன் அஸ்வித் ரெட்டி (வயது 9). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு சிறுவன் வீசிய பந்து அஸ்வித் ரெட்டியின் தலையில் பலமாக தாக்கியது.

    அஸ்வித் ரெட்டி மறுநாள் பள்ளிக்கு சென்றார். அப்போது அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்வித் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×