சேவூா் அருகே குட்டையில் தவறி விழுந்து சிறுவன் பலி

யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.

சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com