மயிலம் அருகே விபத்து- லாரி மீது மினி லாரி மோதி சிறுவன் பலி

2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலம் அருகே விபத்து- லாரி மீது மினி லாரி மோதி சிறுவன் பலி
Published on

மயிலம்:

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகா மஸ்ஜித்(45). மினி லாரி டிரைவர். இவர், தனது மகன் அப்சல் ரகுமானுடன்(11) சென்னையில் இருந்து மினி லாரியில் சேலம் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற லாரி மீது மினி லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவரது தந்தை லாரி டிரைவர் சாகாமஸ்ஜித்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தந்தை கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com