search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puddle"

    • யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
    • அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.

    சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது.
    • காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்றதையொட்டி, புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தொடா் மழை காரணமாக தற்காலிக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், காமராஜா் சந்தையைத் திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில், காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலமாக இருப்பதால், தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத்திய வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி இந்தச் மார்க்கெட்டை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் காா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில், உள்ள குட்டையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மனைவி கந்தேஸ்வரி (55) என்பதும் கடந்த ஜூலை 30 ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது மகள் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×