search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permit"

    • கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

    அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்திலும் இந்த போராட்டத்தை நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    அப்போது போலீசார் 24 மணி நேரத்துக்கு முன்பே போராட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டும். அதனால் நாளை நீங்கள் போராட்டம் நடத்தினால் தடையை மீறித்தான் நடத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து காங்கிரசார் அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்கிற எண்ணத்தில் நாளைக்கு போராட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று நழுவிச் சென்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்த பிறகு பேராட்டம் நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ள காங்கிரசார் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள்.

    • இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில், 2024-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாது காப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது.

    முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணை யாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர் கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை 31.12.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று இரவு 9 மணியில் இருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட் டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண் டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

    இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31-ந்தேதி மாலை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந் தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளுநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏ.டி.வி. எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலை யிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும்.

    மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள், கடற்கரை ஓரங்களில் பாது காப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். மொபைல் சர்வைலன்ஸ் எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் பி.ஏ.சிஸ்டெம், பிளிக்கெரிங் லைட் போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்து வதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை பெருநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடை பிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2024-ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
    • தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து வார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதி கர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி.சபி யுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் நிலை யத்தில் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார் மற்றும் அனைத்துகட்சி பிர முகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் லிங்ரோடு ஜங்ஷன், தட்டாஞ்சாவடி பஸ்நிறுத்தம்,யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் மட்டும் 10 -க்கு10 அடி அளவுள்ள டிஜிட்டல் பேனர்களை போலீஸ் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்றும்இந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும்முடிவு செய்யப்பட்டது.

    • ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
    • ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது.
    • காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்றதையொட்டி, புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தொடா் மழை காரணமாக தற்காலிக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், காமராஜா் சந்தையைத் திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில், காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலமாக இருப்பதால், தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத்திய வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி இந்தச் மார்க்கெட்டை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் காா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #OmniBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் 6 இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த 3 நாட்களில் 5½ லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 3 நாட்களாக அவர் நள்ளிரவு வரை அனைத்து பஸ் நிலையங்களுக்கும் சென்று மக்கள் தேவையறிந்து பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.

    தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று 1413 ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    லைசென்சு, பதிவு சான்று எப்.சி. இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.31 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 4 ஆம்னி பஸ்கள் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்டதால் அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதவிர 11 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்த போது, வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டதால் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட டிக்கெட் கட்டணத்தை ஆம்னி பஸ் ஆபரேட்டரிடம் இருந்து பெறப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி, இணை ஆணையர் முத்து ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நடந்த சோதனையில் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி சிறப்பு பஸ்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை சுமார் 5½ லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆம்னி பஸ்களில் இருந்து கூடுதல் கட்டணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். #OmniBuses
    ×