search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?
    X

    கருத்தரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

    தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?

    • ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
    • ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×