search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister MR Vijaya baskar"

    தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா என்று செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். #SenthilBalaji #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.ம.மு.க.வை சேர்ந்த பலர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி தாய் கழகமான அ.தி.மு.க.வில் தொண்டர்கள் பலர் தங்களை பெருந்திரளாக இணைத்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கரை வேட்டியை கழற்றி விட்டு, மாற்று உடுப்பாக தி.மு.க. வேட்டியை கட்ட நாங்கள் தயாராக இல்லை என அவர்கள் தெரிவித்தது பெருமிதமாக உள்ளது.

    கரூர் மாவட்டத்திலிருந்து அ.ம.மு.க.வை வழிநடத்துகிறேன் என்று சொன்ன ஒருவர் (செந்தில்பாலாஜி), உங்களையெல்லாம் விட்டு விட்டு பதவிக்காக தி.மு.க.வுக்கு சென்று விட்டார். தமிழகத்தின் உரிமை பறிபோகிறது என சொல்லி அவர் (செந்தில் பாலாஜி), அந்த கட்சிக்கு (தி.மு.க.) போய் பாதுகாக்க போகிறாரா?. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலே நீதிமன்றத்தை நாடி உரிமையை நிலைநாட்டியவர் அவர்.


    அதே வழியில் பயணிக்கும் நாங்கள் எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனை முதல்-அமைச்சர் ஆக்குவோம் என கூறி வந்தார். அதற்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்த போது, உயிருள்ளவரை ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி விசுவாசமாக இருப்பேன் என கூறினார். இந்த நிலையில் திடீரென அவர் தி.மு.க.வுக்கு தாவியிருப்பது எதற்காக? என்பது அனைவருக்கும் தெரியும்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த இயக்கத்தை எதிர்த்தனரோ, அதில் போய் அவர் ஐக்கியமாகியிருப்பது அவரது தாய்கழகமான தி.மு.க.வில் இணைந்தது போல் உள்ளது. தற்போது அ.ம.மு.க. என்பது பீஸ் போனது போல் ஆகி விட்டதாக தெரிகிறது. அதைவிட்டு ஐ-வோல்ட் மின்சாரம் என டி.டி.வி. தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. 1½ கோடி தொண்டர்களுடன் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உள்ளது.

    இதிலிருந்து உண்மை தொண்டர்கள் ஒருவரும் மாற்று கட்சிக்கு செல்லவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறும் வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் களப்பணி சீரிய முறையில் இருக்கும். அ.தி.மு.க. மூழ்கும் கப்பலா? என்ற விமர்சனத்துக்கு வெற்றிகனியை பறித்து பதில் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji #MRVijayaBaskar
    தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #OmniBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் 6 இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த 3 நாட்களில் 5½ லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 3 நாட்களாக அவர் நள்ளிரவு வரை அனைத்து பஸ் நிலையங்களுக்கும் சென்று மக்கள் தேவையறிந்து பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.

    தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று 1413 ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    லைசென்சு, பதிவு சான்று எப்.சி. இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.31 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 4 ஆம்னி பஸ்கள் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்டதால் அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதவிர 11 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்த போது, வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டதால் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட டிக்கெட் கட்டணத்தை ஆம்னி பஸ் ஆபரேட்டரிடம் இருந்து பெறப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி, இணை ஆணையர் முத்து ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நடந்த சோதனையில் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி சிறப்பு பஸ்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை சுமார் 5½ லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆம்னி பஸ்களில் இருந்து கூடுதல் கட்டணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். #OmniBuses
    ×