என் மலர்
நீங்கள் தேடியது "administration"
- தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை தவறவிட்டார்
- காவலாளி அதை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்காவிற்க்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த வர்கள் வந்து தொழுகை செய்து வருகின்றனர். இதனால் நாகூர் தர்கா எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் வேலுர் மாவட்டத்தை சேர்ந்த நாகூர் ஆண்டகையின் பக்தர்களுள் ஒருவரான ஜனாப் கரீம் பாசா தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார்.
பின்னர் தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை
தவற விட்டுவிட்டார்.
அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரண்ஸ் தவறவிட்ட தொலைப்பே சியை கண்டெடுத்து அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளி களான ஷாகுல் மற்றும் அய்யப்பன் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து செல்போனை தவற விட்ட ஜனாப் கரீம் பாசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக் தாவுத் முன்னிலையில் அவரிடம் செல்போன் ஒப்படைக்க ப்பட்டது.
சுமார் காலை 7 மணிக்கு தர்காவில் கண்டெடுக்க ப்பட்ட மொபைல் போன் இரவு 10 மணியளவில் உரிய நபரிடம் அன்னாரின் பொருளை பெற்று கொண்ட மைக்கான ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனாப் கரீம் பாசா செல்போனை கண்டு பிடித்து கொடுத்த காவலாளிகளுக்கும் நாகூர் தர்கா நிர்வாகத்தி னருக்கும் நன்றி தெரிவித்தார்.
- திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்.
- விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் வட்டியுடன் சேர்த்து உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனி, துணைத் தலைவர் ஞானமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் அந்த ஆலையின் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில் தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு ஒன்றிய செயலாளர் ராம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பையன், நிர்வாகிகள் குருசாமி, வடிவேலன், அன்பு, ஏ.ஐ.டி.யூ.சி துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான விஜயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:-
விளிம்பு நிலை மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகக் மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்து செயல் திட்டம் தயாா் செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி வைக்க பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாநகராட்சியில் 20 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு பணியும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 2 பணிகளும், பேரூராட்சிகளில் 17 பணிகளும் நவம்பா் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் தொடா்புடைய அலுவலா்கள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா்கள் சரவணகுமாா், செந்தில்முருகன் (கும்பகோணம்), கோட்டாட்சியா்கள் பிரபாகா் (பட்டுக்கோட்டை), லதா (கும்பகோணம்), ரஞ்சித் (தஞ்சாவூா்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
- சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்.
- பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும்.
பரமத்தி வேலூர்:
பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்து இருப்பதாவது-
சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் வருகிற 27-ம்தேதி மாலை 4 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கபட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு, வாயில் முழக்கப் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது எனவும் ஆசிரி யர் சங்கங்கள் முடிவு செய்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கி ணைப்பாளரை உடனடியாக மாற்றிடவும், நிரந்தர பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமனங்கள் செய்திடவும், பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தெருக்களில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தி வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை போடுவதற்காக சிவப்பு மற்றும் பச்சை நிற சிறிய குப்பைத் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
காய்கறி கழிவுகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள் இவையெல்லாம் மக்கும் குப்பைகள் எனவும், இதனை ஒரு குப்பைத்தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரிபேக்ஸ் போன்றவைகளை மக்காத குப்பைகள் எனவும் அந்த குப்பைகளை மற்றொரு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும், தெருக்களில் அந்த குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூத்தம்பூண்டி ஊராட்சி தலைவர் பாவாயம்மாள் ராமசாமி, ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்ட நாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து சேதப்படுத்தினர்.
கொடி கம்பம் சேதப்படுத்திய தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொகுதி பொறுப்பாளர் தாமு இனியவன், செய்தி தொடர்பாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து பார்வையிட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.