search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "want to join Biodiversity"

    • பல்லுயிர் காப்பக திட்டத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தொண்டு நிறுவனங்கள் இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வள்ளலார் பல்லுயிர் காப்பகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, மருத்துவச் செலவுகள் மேற்கொள்வது, கூடுதல் பட்டிகள் அமைப்பது, கருத்தடை அறுவை சிகிச்சை பணி மேற் கொள்வது, அறுவை சிகிச்சை கூடங்கள் கட்டுவது, தடுப்பூசி பணி மேற் கொள்வது மற்றும் அவசர சிகிச்சை ஊர்தி வாங்குவது போன்ற சேவைகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது.

    இத்திட்டத்தில், பயனாளியாக சேர விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், 571, அண்ணா சாலை, கால்நடை மருத்துவ மனை வளாகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகள், பராம ரிப்பு செலவின பதிவேடுகள், பராமரிக்கப்படும் விலங்கினங்கள் விபரம் குறித்த ஆவணங்களை இணைத்து முறையான படிவத்தில் விடுபாடின்றி பூர்த்தி செய்து விண்ணப்பபிக்க வேண்டும்.

    பின்னர் சென்னையில் இருந்து கண்காணிப்பு அலுவலர் காப்பகத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன் பின் நிதி விடுவிப்பு செய்யப்படும். எனவே விலங்கின காப்பகங்கள் நடத்தி வருபவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதனை கரு த்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×