தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்.விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் வட்டியுடன் சேர்த்து உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனி, துணைத் தலைவர் ஞானமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் அந்த ஆலையின் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில் தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு ஒன்றிய செயலாளர் ராம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பையன், நிர்வாகிகள் குருசாமி, வடிவேலன், அன்பு, ஏ.ஐ.டி.யூ.சி துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com