search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest against"

    • சிறுகழஞ்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், சிறுகழஞ்சி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பிரதான சாலையாக கிழக்கு தோட்டம் புதூர் சாலையை பொது மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இந்நிலையில் 1997-ம் ஆண்டு முதல் தார் சாலை யாக மாற்றப்பட்டு சென்னி மலை யூனியனுக்கு சொந்த மாக பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களால் சாலை சுத்தம் செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் வாக னங்களும் பொது போக்கு வரத்துக்கு பெரிதும் உதவி யாக கிழக்கு தோட்டம் புதூர் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கி ரமிக்கும் நோக்கில் அனுமதி யின்றி ஆக்கிரமித்து அதன் மீது கம்பி வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை சிறுக்கழஞ்சி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து வந்துள்ள னர். ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடி மனுவை ஏற்க மறுத்ததோடு புகாருக்கு உள்ளான நபரை அழைத்து விசாரிக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் தனிநபருக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் ஊராட்சி தலைவர் செயல்பட்டு வருகிறார் என கூறி சிறுகழஞ்சி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதனால் சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சென்னிமலை போலீசார் மற்றும் சென்னிமலை யூனியன் பி.டி.ஓ. ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மறியல் போரா ட்டத்தினை கைவிட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
    • இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தி கோஷம் போட்டு போட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • வேடசந்தூர் தபால் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஜி.எஸ்.டி. வரிவிதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் தபால் நிலையம் முன்பாக அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, முருகன், முத்துக்குமார், நாகராஜ், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்.
    • பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும்.

    பரமத்தி வேலூர்:

    பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்து இருப்பதாவது-

    சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் வருகிற 27-ம்தேதி மாலை 4 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கபட்டுள்ளது.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு, வாயில் முழக்கப் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது எனவும் ஆசிரி யர் சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கி ணைப்பாளரை உடனடியாக மாற்றிடவும், நிரந்தர பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமனங்கள் செய்திடவும், பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×