search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "removal of"

    • 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.
    • அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணியினர் எஸ்.ஆர்.டி. கார்னர், சத்தியமங்கலம் பஸ் நிலையம், வடக்குப்பேட்டை, கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.

    சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பேனர் வைத்ததால் இன்று காலை அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் திண்டல் செல்லும் சாலை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடந்தது.

    வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு- பெருந்துறை ரோடு, நசியனூர் ரோட்டில் இருந்து வில்லர சம்பட்டி நால்ரோடு வழி யாக சித்தோடு, பவானி வழியாக கோபி சத்திய மங்கலம் செல்கின்றன.

    இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழி யாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பெருந்துறை கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக ரோடுகள் அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது. அவ்வாறு விரிவாகப் பணியின் போது மின் கம்பங்கள் அகற்றப்படாமல் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடு அமைக்க ப்பட்டது. இவ்வாறு அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அகற்ற ப்படாமல் மின்கம்பங்களை தார் ரோடு அமைக்க ப்பட்டது.

    இதனால் இரவு நேரங்க ளில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது.

    இதனையடுத்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட னர். இதனை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.

    போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய அனைத்து மின்கம்பங்களையும் அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு சாலையோரம் நட்டி மின் இணைப்புகள் கொடுத்து உள்ளனர். மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.

    • அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடை பெற்றது.
    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் அனுமதி யின்றி வைக்கப்ப ட்டுள்ள விளம்பர பல கைகள், பேன ர்கள் மற்றும் பிளாஸ்டிக் போர்டு களை அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், துப்பு ரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வை யாளர் ஈஸ்வரமூர்த்தி, செந்தில்கு மார் ஆகியோர் தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணி நடை பெற்றது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புக்கள் 2023-2024-ன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

    அதன் அடிப்படையில் இந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடை பெற்றது.

    • ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
    • இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர்ரோடு, நான்கு ராஜா வீதிகள், பெருந்துறை ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.

    இக்குழு வும் அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரடி யாக தலையிட்டு ஆக்கிரமிப்பு க்களை அகற்றி, சாலை விரிவாக்க த்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி:

    பவானி-அந்தியூர் பிரிவு ரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலை விரிவுபடுத்தும் நோக்கில் ரோட்டின் இரு பகுதிகளில் அகலப்படுத்தப்பட்டு புதிய தார் ரோடு போடப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த ரோட்டில் பவானி-அந்தியூர் பிரிவு பஸ் நிறுத்தம் முதல் காடையாம்பட்டி பஸ் நிறுத்தம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் பலர் ஆகிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக பவானி நெடுஞ்சாலை துறைக்கு புகார் சென்றது.

    இதனைத்தொடர்ந்து பவானி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பவானி-அந்தியூர் பிரிவு ரோடு முதல் காடையாம்பட்டி வரை ரோட்டில் இரு பகுதிகளிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் மற்றும் மரத்தின் கிளைகள் ஆகியவற்றை அப்புற ப்படுத்தி போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது மரக்கிளைகள் வெட்டி எடுத்ததால் அந்தியூர் பிரிவு ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்க மரத்தின் நிழல் இது நாள் வரை பயன்படுத்திய பயணிகள் மரத்தின் கிளைகள் வெட்டப்ப ட்டதால் நிழல் இல்லாமல் போகிறதே என பயணிகளும், அப்பகுதி பொதுமக்கள் பலரும் புலம்பினர்.

    அதேபோல் மரக்கி ளைகளை அப்புறப்ப டுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்ரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்கும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
    • இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×