மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

பெருந்துறை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தி கோஷம் போட்டு போட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com