என் மலர்
நீங்கள் தேடியது "public blockade"
- தங்குவதற்கு இட வசதி செய்து தர வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நூருல்லாபேட்டை மற்றும் கோவிந்தபுரம் பகுதியில் ஏரிகால்வாய், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 48 வீடுகள், 1 அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை வருவாய்த்துறையினரால் கடந்த வாரம் இடிக்கப்பட்டது.
வீடுகள் இழந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்று இடமோ அல்லது நேதாஜிநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளோ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடுகள் இழந்த பொதுமக்கள் அனைவரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பள்ளியில் தூங்குவதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் பொது மக்களை பள்ளியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால் அப்பகுதியினர் சாலையோர பகுதிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழே தங்கி வரும் நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒவ்வொரு வேலை உணவிற்கும், தங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் கைக்குழந்தைகள், முதியவர்கள், இளம்பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை வைத்துக்கொண்டு மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும், எனவே அதிகாரிகள் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும்,
மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிகமாக தங்குவதற்கு ஏதேனும் இட வசதி செய்து தர வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் சம்பத், டிஎஸ்பி (மாவட்ட குற்றப்பிரிவு) நிலவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும், அவ்வாறு பெறப்படும் கோரிக்கை மனுவின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது ராம சமுத்திரம் மலையை ஒட்டி மூளவட்டம், தனி காலனி, மதுகொள்ளி, மலை வட்டம், பனந்தோப்பு வட்டம், சந்தகாமணி, உள்ளிட்ட கிராமத்தை பொதுமக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் பணம் கட்டி வீட்டு ரசிது, மின் இணைப்பு ஆகியவற்றை பெற்றுள்ள னர். ஆனால் பகுதி மக்கள் தற்போது பணம் கட்டி வீட்டு ரசிது கேட்கும் போது ஊராட்சி செயலர் ஜெயசுதா அந்த இடம் ஆந்திர பகுதிக்கு சொந்தமானது எனவும் எனவே தற்போது அதற்கு வீட்டு வரி கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகை யிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடைய பேச்சு வார்த்தை நடத்தி இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர்.
- பாதை அடைக்கப்பட்டதால் அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
நத்தம் அருகே கோட்டை யூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர். நிலத்தின் உரிமையாளர் திடீரென்று தனது நில த்தினை அடைத்து விட்டார். எனவே குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே பாதை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்க ளுடன் சமரசம் பேசினர். அப்போது நத்தம் தாலுகா தாசில்தாரிடம் இது குறித்து தீர்வு காண பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டு முடிவெடுக்க கூறிய ஆலோ சனையை ஏற்று மறியலை கைவிட்ட னர்.
இதனால் சுமார் 1 மணி நேரம் கோட்டையூர் - அரவங்குறிச்சி வழியாக நத்தம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
- 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே பஞ்சனம்பட்டி கிராமத்தில் குறிஞ்சி வட்டம் வசிப்பவர்கள் குறவன் சாதி சான்றிதழ் கேட்டு கொரட்டி வருவாய் அலுவலர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 2 நாட்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- போலீசாரிடம் மனு அளித்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியம் மேல்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரேசன் கடை உள்ளது.
இந்த ரேசன் கடை அருகே உள்ள அரசு இடத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் கற்களைக் கொட்டியும், கழிவு நீரை வெளியேற்றியும் ரேசன் கடைக்கு வரும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் ரேசன் கடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ரேசன் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கிராமத் தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றிரவு அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
மேலும் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களும், பெண்களும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறுகழஞ்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், சிறுகழஞ்சி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பிரதான சாலையாக கிழக்கு தோட்டம் புதூர் சாலையை பொது மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர்.
இந்நிலையில் 1997-ம் ஆண்டு முதல் தார் சாலை யாக மாற்றப்பட்டு சென்னி மலை யூனியனுக்கு சொந்த மாக பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ளது.
100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களால் சாலை சுத்தம் செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் வாக னங்களும் பொது போக்கு வரத்துக்கு பெரிதும் உதவி யாக கிழக்கு தோட்டம் புதூர் சாலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கி ரமிக்கும் நோக்கில் அனுமதி யின்றி ஆக்கிரமித்து அதன் மீது கம்பி வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளார்.
இது தொடர்பாக பலமுறை சிறுக்கழஞ்சி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து வந்துள்ள னர். ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடி மனுவை ஏற்க மறுத்ததோடு புகாருக்கு உள்ளான நபரை அழைத்து விசாரிக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் தனிநபருக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் ஊராட்சி தலைவர் செயல்பட்டு வருகிறார் என கூறி சிறுகழஞ்சி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதனால் சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சென்னிமலை போலீசார் மற்றும் சென்னிமலை யூனியன் பி.டி.ஓ. ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மறியல் போரா ட்டத்தினை கைவிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
திருத்தணி:
சீரான குடிநீர் வழங்க கோரி திருத்தணி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
திருத்தணி அரக்கோணம் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியபோது இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக இந்திரா நகருக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடந்த ஆறு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யாததால் எங்கள் பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். டிராக்டரில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.
மேலும் தெருக்குழாயில் வரும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாமல், மாசு கலந்து வருவதால் உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் நேரில் வந்து பொதுமக்களிடம் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்குவதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர்
- மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதன்படி ஏரியூர் கிராமத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு போலீஸ்துறை இயக்குனரின் சுற்றறிக்கை படி வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார் அனுமதி வழங்கினர்.
நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒன்று கூடி விறுவிறுப்பாக செய்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்த கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த தடை செய்யப் போவதாக அறிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசின ர். மேலும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- குடியிருப்பு பகுதி சாலை ஆக்கிரமிப்பு
- தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேன்ம லைபட்டி கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தனியார் நிலத்தின் மூலம் சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிக்கரை மேல் சாலையை அமைத்து அந்த பாதையை கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் ஏரிக்கரை திடீரென பள்ளம் தோண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வழியில்லாமல் செல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தாசில்தார் மஞ்சுளா விடம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சாலையை மீட்டு தர கோரி புகார் மனு அளித்தனர்.
புகார பெற்று கொண்ட தாசில்தார் மஞ்சுளா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
- தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 213 பேருக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயனாளிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டா வழங்கிய இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறாத மனைகளின் பட்டாவை ரத்து செய்து நிலமற்ற வேறு நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதை கண்டித்தும், உடனடியாக இடத்தை அளவீடு செய்ய வலியுறுத்தியும் பயனாளிகள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதன், வக்கீல் வேல்முருகன் ஆகியோரின் தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- தொடர் மின்வெட்டு காரணமாக மின் பொறியாளர் அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
- இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப் பட்டு பகுதியை சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் திருவண்ணா மலை மாவட்டம் பெருந்துறை பட்டில் இருந்து மூங்கில் துறைப்பட்டு பகுதிக்கு மின்சாரம் வினி யோகிப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே 2 முறை மூங்கில்துறைப்பட்டு இளம் மின் பொறியாளர் அலுவல கத்தில் போராட்ட மும் நடத்தியுள்ளனர். இருப்பி னும் சீரான மின்சாரம் வினி யோகம் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வரை அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 3-வது முறையாக மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மூங்கில் துறைப் பட்டு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.
மதுரை மாநகராட்சி 55, 56-வது வார்டு (அனுப்பானடி, ஹவுசிங் போர்டு) பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews






