ஆற்றில் மூழ்கி டிராக்டர் டிரைவர் பலி

கால் தவறி ஆழமான பகுதியில் விழுந்து பரிதாபமாக இறந்தார் போலீசார் விசாரணை
ஆற்றில் மூழ்கி டிராக்டர் டிரைவர் பலி
Published on

அரக்கோணம்:

தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 58). டிராக் டர் டிரைவர். இவர் நேற்று எஸ்.என்.கண்டிகையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள கல்லாற்றில் இடுப்பளவு நீரில் இறங்கினார்.

அப்போது திடீரென கால் தவறி ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாகப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com