என் மலர்
இந்தியா

பெண்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய அமேசான் உடன் பேச்சுவார்த்தை: தெலுங்கானா முதல்வர்
- ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள்.
- தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற திட்டம்.
தெலுங்கானாவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேச சந்தைகளை எட்டும் வகையில் அமேசான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அக்சய பாத்திர பவுண்டேசன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேவந்த் ரெட்டி "தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற மாநில அரச திட்டமிட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
குழந்தைகளின் கல்வி பெற்றோரின் வாழ்க்கையை மாற்றுவதால், கோடங்கல் தொகுதியில் உள்ள 312 அரசுப் பள்ளிகளில் 28,000 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திர அறக்கட்டளை மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.






