என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் அதிர்ச்சி: போக்குவரத்து அதிகாரிக்கு ரூ. 100 கோடிக்கும் அதிகமான சொத்து..!
- ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
- சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.






